நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகள் மும்பை இந்தியன்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து இந்த ஐபிஎல் தொடரில் மூன்றாவது தோல்வியாக இது மும்பை அணிக்கு அமைந்திருக்கிறது. இந்த தோல்வி குறித்து மும்பை அணியில் என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து கேப்டன் ஹெர்பிக் பாண்டியா சில முக்கிய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
இது குறித்து ஹர்திக் பாண்டியா பேசும்போது ” சமீபத்தில் எங்கள் அணி தொடர்ந்து தடுமாறி வருகிறது. விக்கெட்டுகள் அதிக அளவில் நாங்கள் விடுவதும் எதிரணி அதிக ரன்கள் குவிக்க விடுவதும் எங்கள் தோல்விக்கு தொடர்ச்சியான காரணமாக அமைந்து வருகிறது. கடந்த போட்டிகளில் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறைகளிலும் மோசமாக செயல்பட்டு வருகிறோம். எனவே இந்த நிலையை நாங்கள் உடனடியாக மாற்ற வேண்டும்.
நேர்மையாகச் சொல்லப் போனால் எங்களுடைய தற்போதைய அணுகுமுறை செயல்படவில்லை. இரண்டு துறைகளிலுமே நாங்கள் பின்தங்கி இருக்கிறோம். எனவே டாஸ் என்பது ஒரு பொருட்டல்ல நாங்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டால் டாஸ் ஒரு பெரிய விஷயமாக எங்களுக்கு இருக்காது. நாங்கள் வெற்றி பெறுவதற்கு என்னென்ன வேறு வழிகள் இருக்கின்றன என்பதை நாங்கள் முதலில் ஆராய வேண்டும்” என்று பாண்டியா பேசியிருக்கிறார்.

