பொறுப்பில்லாமல் பேசுறார்.. தப்பை ஒதுக்க மாட்டிங்கிறார்.. என்ன கேப்டன் இவரு ? என்னால ஜீரணிக்கவே முடியல – ருத்துராஜ் பற்றி மனோஜ் திவாரி கடுமையான விமர்சனம்

2025 ஐ.பி.எல் தொடர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நினைத்தது போல செல்லவில்லை. முதல் போட்டியை வென்ற பின்னர் பெங்களூர் அணியிடம் 18 ஆண்டுகள் பின்னர் சேப்பாக்கில் அவமானத் தோல்வி, அதன் பிறகு நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிராக மற்றுமொரு தோல்வி என அடுத்தடுத்து 2 சறுக்கள்களைச் சந்திதுள்ளது. இதற்க்கு முக்கியக் காரணம், சென்னை அணியின் கவலைக்கிடமான பேட்டிங்.

- Advertisement -

மேலும் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் ஃபீல்டில் எடுக்கும் முடிவுகளுமே, ஆட்டத்தின் போக்கை சென்னை அணியின் கையில் இருந்து பரிப்பதாக கடுமையான விமர்சனங்களும் வந்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைவராக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்ட பிறகு, அவரது தலைமைத்துவம் குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மனோஜ் திவாரி, சமீபத்தில் ருதுராஜின் தலைமை பற்றி ஒப்பனாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

” ருதுராஜ் கெய்க்வாட் மேட்சுக்கு பிறகு பேட்டிகளில் பேசுவதைப் பார்க்கையில், என்னால ஜீரணிக்க முடியவில்லை. அவர் ரொம்ப பிடிவாதமா இருக்கிற மாதிரி தெரியுது. செய்யும் தவறுகளை ஒத்துக் கொள்ளாமல் இருக்கிறார். பெங்களூர் அணிக்கு எதிரானப் போட்டியில் எம்.எஸ்.தோனி 9-வது இடத்துல பேட்டிங் செய்தது பெரிய பேச்சை உண்டாகியது. ஆனால் ருதுராஜ் கெய்க்வாட் சுலபமாக, 50 ரன்னுக்கு மட்டுமே தோற்றதில் கொஞ்சம் மகிழ்ச்சி எனச் சொன்னார். இது என்ன மாதிரியான கேப்டன் பேச்சு எனத் தெரியவில்லை. ” என்றார் மனோஜ் திவாரி.

- Advertisement -

மேலும், ” ருதுராஜ் கெய்க்வாட் ரொம்ப அழுத்தத்தில் இருப்பது போலத் தெரிகிறது. அவர் மனதில் பேச விரும்புவதை அவரால் பேச முடியவில்லை. ” என்றார். 5 கோப்பைகள் வென்ற தோனியின் அணி என்பதால் புதிய இளம் கேப்டனுக்கு அழுத்தம் இருப்பது நிராகரிக்க முடியாத ஒன்று தான். கடந்த சீசன் முழுக்க அணியைத் தலைமைத் தாக்கியதால், இது ருத்துராஜுக்கு ஓரளவாவது இயல்பாகியிருக்க வேண்டும். சென்னை அணியின் சிறந்த பிளேயிங் லெவன் எதுவெனத் தெரியாமல், வீரர்களை மாற்றி மாற்றி தேர்வு செய்வதாலும், போதிய வலுவான ஹிட்டர்கள் இல்லாததுமே சென்னை அணியையப் பின்னடைவில் வைக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles