தோளில் ஏற்பட்ட காயம்.. இனி ஹேசல்வுட் வர மாட்டாராம்.. விரக்தியில் ஆர்சிபி ரசிகர்கள்

2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் வெடித்த மோதல் காரணமாக கடந்த 5 நாட்களாக எந்தவொரு ஐபிஎல் போட்டியில் நடக்கவில்லை. தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் – டெல்லி இடையிலான ஆட்டத்தை கூட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

- Advertisement -

தற்போது இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் முடிவுக்கு வந்துள்ள சூழலில், ஐபிஎல் தொடரை மே 16ம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து அணிகளும் தங்களின் வீரர்களை மீண்டும் அழைத்துள்ளனர். வெளிநாட்டு வீரர்கள் பலரும் தங்களின் நாடுகளுக்கு நேற்று திரும்பிய நிலையில், அடுத்த 2 நாட்களில் மீண்டும் வர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

- Advertisement -

ஆர்சிபிக்கு சிக்கல்

அதன்படி ஆர்சிபி அணி தரப்பில் ஹேசல்வுட், டிம் டேவிட், லிவிங்ஸ்டன், பில் சால்ட், ஜேக்கப் பெத்தேல், லுங்கி இங்கிடி உள்ளிட்ட அத்தனை வீரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான வீரர்கள் மீண்டும் வருவதற்கு சம்மதித்துள்ள நிலையில், ஹேசல்வுட் மட்டும் மீண்டும் இந்தியா வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

அதாவது இந்தியாவில் இருந்த போது ஹேசல்வுட்டுக்கு தோளில் காயம் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஹேசல்வுட்டுக்கு ஓய்வளிக்கப்பட்டு, அந்த இடத்தில் லுங்கி இங்கிடி களமிறக்கப்பட்டிருந்தார். ஹேசல்வுட் இல்லாத போதே, ஆர்சிபி அணியில் இருந்த பவுலிங் பிரச்சனைகள் வெட்ட வெளிச்சமாகியது. சிஎஸ்கே அணி வீரர்கள் எளிதாக வெல்ல வேண்டிய ஆட்டத்தை கோட்டைவிட்டனர்.

ஹேசல்வுட் அவுட்

தற்போது ஹேசல்வுட் காயம் காரணமாக மீண்டும் வரப் போவதில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி சுற்றுக்கு ஆஸ்திரேலியா அணி தகுதி பெற்றுள்ளது. இதனால் அந்த போட்டிக்கு ஃபிட்னஸ் உடன் இருப்பதற்காக ஹேசல்வுட்டை மீண்டும் அனுப்ப வேண்டாம் என்று ஆஸ்திரேலியா நிர்வாகம் முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. 

- Advertisement -

இதனால் ஆர்சிபி அணி ரசிகர்கள் விரக்தியடைந்துள்ளனர். ஏனென்றால் ஹேசல்வுட் மட்டுமே தனியொரு வீரராக ஏராளமான போட்டிகளை ஆர்சிபி அணி பக்கம் திருப்பி இருக்கிறார். இதனால் ஹேசல்வுட் இடத்தை ஆர்சிபி அணியால் நிரப்ப முடியாது என்பதால், இந்த சீசனிலும் கோப்பையை வெல்ல முடியாது என்று புலம்பி வருகின்றனர். 

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles