சொன்னா கேளுங்க.. இவங்க ரெண்டு பேரையும் தாண்டி இந்த வாட்டி WC யாரும் ஜெயிக்கிறது கஷ்டம்.. ஃபாப் டு பிளேஸிஸ் அதிரடி.!

2023 ஆம் ஆண்டிற்கான 13வது உலகக் கோப்பை போட்டிகள் வருகின்ற அக்டோபர் மாதம் 5ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற இருக்கிறது . இன்னும் ஒரு மாத காலத்தில் உலகக் கோப்பை தொடங்க இருக்கும் நிலையில் உலகக்கோப்பையை வெல்லப்போகும் அணி எது என்பது தொடர்பான கருத்துக்கணிப்புகள் பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் அளவு முன்னால் வீரர்களாலும் முன்வைக்கப்பட்டு வருகிறது .

- Advertisement -

தென்னாப்பிரிக்கா அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஆர்சிபி அணியின் கேப்டனான ஃபாப் டு பிளேஸிஸ் கரீபியன் பிரிமியர் லீக் போட்டிகளில் ஏற்பட்ட காயத்திற்காக அறுவை சிகிச்சை செய்து தற்போது ஓய்வில் இருக்கிறார். இவர் 2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் வைத்து நடைபெற இருக்கும் உலகக் கோப்பை போட்டியில் எந்தெந்த அணிகளுக்கு வாய்ப்பு இருக்கிறது என தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

2011 ஆம் ஆண்டு இந்தியா ஸ்ரீலங்கா மற்றும் பங்களாதேஷ் நாடுகளில் வைத்து நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் தான் ஃபாப் டு பிளேஸிஸ் முதல் முதலாக உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினார். மேலும் 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்ற உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணியின் துணை கேப்டனாகவும் 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் வைத்து நடைபெற்ற உலக கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாகவும் செயல்பட்டவர்.

- Advertisement -

கடந்த உலகக் கோப்பை போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை இறுதிப் போட்டிகளுக்கு கூட தகுதி பெறாமல் முதல் சுற்றிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது. நிறவெறியின் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தடை செய்யப்பட்ட தென்னாப்பிரிக்கா 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் நீண்ட கால இடைவேளைக்குப் பிறகு பங்கேற்றது. இதுவரை எட்டு உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடி இருக்கும் தென்னாப்பிரிக்கா அணி அதில் நான்கு முறை அரையிறுதி போட்டிகளுக்கு தகுதி பெற்று இருக்கிறது . இரண்டு முறை கால் இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்று இருக்கிறது.

இந்நிலையில் 2023 ஆம் ஆண்டில் உலகக் கோப்பையை வெல்லப் போகும் அணி எது என்பது குறித்து தனது கருத்தை பதிவு செய்திருக்கும் ஃபாப் டு பிளேஸிஸ்” என்னை பொருத்தவரை தென்னாப்பிரிக்க அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் வலுவான அணியை கொண்டிருக்கிறது என்றாலும் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகவும் கடினமான ஒரு காரியம் . அதனால் இந்தியா இந்த வருட உலகக் கோப்பையை கைப்பற்றும் என்று நினைக்கிறேன். மேலும் இந்தியாவிற்கு பிறகு மற்றொரு அணியை தேர்வு செய்வதென்றால் அது ஆஸ்திரேலியாவாகத் தான் இருக்கும். அந்த அணியின் உடைய பலம் மற்றும் அவர்கள் ஐசிசி கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் வரலாறு ஆகியவற்றைக் கொண்டு பார்த்தால் ஆஸ்திரேலியா அணிக்கும் வாய்ப்பு இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” வெள்ளை பந்து கிரிக்கெட்டை பொருத்தவரை தென் ஆப்பிரிக்கா அணி வலுவாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன் அவர்களுக்கு ஒரு நாள் போட்டியில் நல்ல அனுபவமும் இருக்கிறது. மற்ற அணிகளுக்கு துணைக் கண்டங்களில் விளையாடுவதில் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் இங்கு நிலவும் கால சூழ்நிலை மற்றும் ஆடுகளத்தின் தன்மை ஆகியவை மிகப்பெரிய சவாலாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

இந்த கருத்து தொடர்பாக விளக்கமாக பேசிய ஃபாப் டு பிளேஸிஸ்” டி20 கிரிக்கெட் போட்டிகளை விட ஆசிய நாடுகளில் மிகப்பெரிய சவால் எது என்றால் 50 ஓவர் போட்டிகளை விளையாடுவது தான். டி20 போட்டியில் ஆடுகளங்களின் தன்மை நன்றாக இருக்கும் மேலும் 40 ஓவர்களுக்கும் ஆடுகளம் சம நிலையில் இருக்கும். ஆனால் 50 ஓவர் போட்டிகளில் அப்படி இல்லை. ஆட்டம் செல்ல செல்ல ஆடுகளங்கள் மெதுவாக திரும்புவதோடு சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக அமையும். இது பிற நாட்டு அணி வீரர்களுக்கு சவாலாக இருக்கும்” என்று தனது பேட்டியில் கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles