உண்மைய சொல்கிறேன்.. கம்பீர் இவ்வளவு சொல்லியும்.. கோலி ரோகித்தை துலிப் ட்ராபி ஆட வைக்காத காரணம் இதுதான் – ஜெய் ஷா பேட்டி

இந்தியாவில் 2024/25 வருடத்திற்கான உள்நாட்டு சீசன் கிரிக்கெட் போட்டிகள் வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் தொடங்க இருக்கிறது. இந்த சீசனின் முதல் போட்டி தொடராக துலீப் டிராபி, ஆந்திர மாநிலத்தின் அனந்தபுரா மற்றும் பெங்களூரில் வைத்து நடைபெற உள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கும் இந்தப் போட்டி தொடரில் 4 அணிகள் பங்கு பெறுகின்றன .

- Advertisement -

இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்தியா ஏ அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் பி அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சி மற்றும் டி அணிகளுக்கு கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து இந்திய அணியின் சர்வதேச வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் முன்னணி வீரர்களான கில், ஜெய்ஸ்வால், சூரியகுமார் யாதவ், கே.எல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் துலீப் டிராபி தொடரில் பங்கேற்கின்றனர். இவர்கள் தவிர இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்களும் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் கடந்த வருடம் ரஞ்சிப் போட்டிகளில் விளையாட மறுத்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோருக்கும் துலீப் டிராபி அணியில் இடம் கிடைத்திருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா ஜஸ்ப்ரீத் பும்ரா, ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற வீரர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் துலீப் டிராபி போட்டிகளில் ஏன் பங்கேற்கவில்லை என கிரிக்கெட் வல்லுனர்களும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கேள்வி எழுப்பி இருந்தனர். அவர்களது கேள்விகளுக்கு பிசிசிஐ செக்ரட்டரி ஜெய் ஷா விளக்கம் அளித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை தவிர மற்ற அனைத்து வீரர்களும் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் பங்கேற்கின்றனர். நாம் அனைவரும் இதை பாராட்ட வேண்டும். இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் புச்சி பாபு கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்கின்றனர். விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற வீரர்களை நாம் வற்புறுத்தக் கூடாது.

- Advertisement -

இது போன்ற தொடர்களில் அவர்கள் பங்கேற்று விளையாடும் போது காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கிறது. மேலும் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளின் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். வீரர்களை எப்போதும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் துலீப் டிராபி அணியில் ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளார். 2022 ஆம் வருட இறுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயம் அடைந்த அவர் 16 மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகி இருந்தார். இதனைத் தொடர்ந்து 2024 ஆம் வருட ஐபிஎல் போட்டிகள் மூலம் கிரிக்கெட் ஆடுகளத்திற்கு திரும்பிய அவர் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியில் கலந்து கொண்டார். மேலும் இலங்கை சென்ற இந்தியாவின் ஒருநாள் போட்டி அணியிலும் ரிஷப் பண்ட் இடம் பெற்றார். தற்போது துலீப் டிராபி அணியில் இடம் பெற்று இருப்பதன் மூலம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் இடம்பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles