ரோஹித் இதெல்லாம் சரியில்ல.. கோலி மட்டும் கேப்டனா இருந்திருந்தா.. அஸ்வின் கதையை வேற மாதிரி இருந்திருக்கும்.. பாகிஸ்தான் பசித் அலி பேட்டி

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்தார். அதன் பிறகு, அவர் டிசம்பர் 19, வியாழன் அன்று சென்னை திரும்பினார். அஸ்வினின் இந்த திடீர் முடிவை குறித்து சர்வதேச கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாசித் அலி, விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக இருந்திருந்தால், 2024-25 பார்டர்-கவாஸ்கர் டிராபி முடிவடையும் வரை, குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இன்னும் இரண்டு முக்கியமான டெஸ்ட்கள் மீதமுள்ள நிலையில், தனது அறிவிப்பை ஒத்திவைக்கும்படி அஸ்வினை சமாதானப்படுத்தியிருப்பார்; அஸ்வினின் உடல் மொழியை பார்த்தே புரிந்துகொள்ள முடிகிறது, என்றும் கூறியுள்ளார்.

- Advertisement -

விராட் கோலி இப்படி பண்ணி இருக்க மாட்டார்:

பாசித் அலி தனது யூடியூப் சேனலில், “நான் உத்தரவாதம் தருகிறேன் விராட் கோலி கேப்டன் ஆக இருந்திருந்தால் அவர் கண்டிப்பாக அஸ்வினை ஓய்வு பெற அனுமதித்திருக்க மாட்டார், இரண்டு போட்டிகளுக்குப் பிறகு ஓய்வு குறித்து அறிவிக்க சொல்லி இருப்பார். ஏன்? ஏனெனில் சிட்னியில் நடைபெறும் போட்டிக்கு அஸ்வின் கண்டிப்பாக தேவைப்படுவார்.

- Advertisement -

ராகுல் டிராவிட் அல்லது ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால், அவர்களும் இந்த தருணத்தில் அஸ்வினி ஓய்வு பெற அனுமதித்திருக்க மாட்டார்கள். ரோஹித்தும் கம்பீரும், ‘இந்த நேரத்துல அதையே அறிவிக்காதே, இந்த இரண்டு டெஸ்டுகளுக்கும் நீ எங்களுக்குத் தேவை’ குறிப்பாக சிட்னியில் நடைபெறும் போட்டிக்கு கண்டிப்பாக நீ தேவை, என்று அவனைச் சமாதானப்படுத்தியிருக்க வேண்டும்”

இதையும் கொஞ்சம் படிங்க: தம்பி ஜெய்ஸ்வால் வாய் பேசுவதை குறைத்து இதில் கவனம் செலுத்துங்கள்.. அப்பதான் உங்களுக்கு நல்லது – கவாஸ்கர் அறிவுரை

- Advertisement -

அவரின் உடல் மொழியே அனைத்தும் கூறியது:

மேலும் அவர், “சில விஷயங்களை யாரிடமும் சொல்ல முடியாது, ஆனால் புரிந்து கொள்ள முடியும். ஏனென்றால் உங்களது உடல் மொழி அப்படியே காட்டிக் கொடுத்து விடும். அவர் விராட் கோலி கட்டிப்பிடித்த விதமே அனைத்தையும் கூறியது. நான் ஒப்புக்கொள்கிறேன், அவர் முன்பு போல் இப்போது பந்துவீச்சு செயல்திறன் இல்லை. ஆனால் நீங்கள் அவரை இவ்வளவு அழுத்தம் உள்ளாக்கிய அளவுக்கு அவர் மோசமாக இல்லை… அவர் 537 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார்” என்று கூறி முடித்தார், பாசித் அலி.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles