சிஎஸ்கேக்கு அக்கறை இல்லை.. எங்களது முழு கவலையும் இவர் மீதுதான்.. பங்களாதேஷ் கிரிக்கெட் விமர்சனம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிகுர் ரஹ்மானின் என்ஓசியை சென்னை சூப்பர் கிங்ஸ் கேட்டு கொண்டதற்கு இணங்க மே 1ஆம் தேதி முதல் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் நீட்டித்துள்ள நிலையில், முஸ்தபிக்குர் ரஹ்மானின் உடல் தகுதி குறித்து சிஎஸ்கேவுக்கு அக்கறை இல்லை என்று வங்காளதேச கிரிக்கெட் செயல்பாட்டு தலைவர் காட்டமான விமர்சனத்தை அளித்துள்ளார்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கியமான வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக இருக்கும் வங்காளதேசத்தைச் சேர்ந்த முஸ்தபிக்குர் ரஹ்மான் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். இதுவரை இந்த ஐபிஎல் தொடரில் மொத்தமாக 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

தற்போது சென்னை அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக பார்க்கப்படும் நிலையில், முஸ்தபிகுர் ரஹ்மான் சமீபத்தில் வங்காளதேசம் சென்று டி20 உலக கோப்பையில் பங்கேற்பதற்காக தனது விசாவை புதுப்பிக்க சென்றார். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஒரு போட்டியை தவறவிட்டார்.

- Advertisement -

இதனால் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் இல்லாத நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அந்த போட்டியில் தோல்வியை தழுவியது. தற்போது கொல்கத்தா மற்றும் மும்பை அணிகளை வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியிருக்கிறது. இந்த நிலையில் டி20 உலக கோப்பை தயாராகும் விதமாக வங்காளதேச அணி ஜிம்பாப்வே அணியுடன் டி20 தொடரில் விளையாடுகிறது.

ஐபிஎல்லில் ஏப்ரல் 31ஆம் தேதி வரை மட்டுமே ஐபிஎல்லில் விளையாட அனுமதி அளித்திருந்த வங்காளதேச கிரிக்கெட் வாரியம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேட்டுக் கொண்டதற்கு இணங்க மே 1ஆம் தேதி வரை ஒப்பந்தத்தை நீட்டித்தது. இந்த நிலையில் முஸ்தபிக் ரஹ்மான் ஐபிஎல்லில் கற்றுக் கொள்வதற்கு ஒன்றும் இல்லை. சிஎஸ்கேவிற்கு அவரது உடற்தகுதி மீது அக்கறை இல்லை என்று வங்காளதேச கிரிக்கெட் செயல்பட்டு தலைவர்
ஜலால் யூனிஸ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது குறித்த அவர் கூறும் பொழுது
“முஸ்தஃபிகர் ரஹ்மானின் ஐபிஎல் கற்றுக் கொள்வதற்கு ஒன்றுமில்லை. அவரது கற்றல் செயல்முறை முடிந்து விட்டது. மாறாக இளம் வீரர்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ளலாம். இதனால் வங்காளதேசம் எந்த விதத்திலும் பயனடையாது. மேலும் எங்களின் கவலை தற்போது முஸ்தபிகுர் ரஹ்மானின் உடற்தகுதி மீது மட்டுமே இருக்கிறது. சிஎஸ்கே அவரிடம் இருந்து 100% ஒத்துழைப்பை எடுக்க விரும்புகிறது.

இதையும் படிங்க:டி20 உலக கோப்பை இந்திய அணி.. ஹர்திக் பாண்டியாவுக்கு ஆப்பு.. களமிறங்கும் சிஎஸ்கே வீரர்.. பலே திட்டத்துடன் ரோஹித் சர்மா

அவரது உடற்தகுதி குறித்து சிஎஸ்கேவிற்கு கவலை இல்லை. நாங்கள் அவரின் பணிச்சுமை குறித்து கவலை கொள்கிறோம். முஸ்தபிசுரை அழைத்து வருவதற்கு காரணம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்காக மட்டுமல்ல. அவரது பணிச்சுமையை குறித்து உலகக் கோப்பைக்கு தயார்படுத்துவதற்காகவும்தான்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles