தம்பி முஸ்தபிசுர் உடனே கிளம்பி வா.. சிஎஸ்கே – ல ஒரு பிரயோஜனம் இல்லை.. பங்களாதேஷ் நிர்வாகி சர்ச்சை

2024 ஆம் வருட ஐபிஎல் தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது 32 போட்டிகள் முடிவடைந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 புள்ளிகள் உடன் முதலிடத்தில் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 8 புள்ளிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டாவது இடத்திலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளன.

- Advertisement -

இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்நிலையில் சென்னை அணியின் முன்னணி வேக பந்து வீச்சாளரான முஸ்தபிசுர் ரஹ்மான் வருகின்ற மே ஒன்றாம் தேதியுடன் சிஎஸ்கே அணியிலிருந்து விலகுகிறார்.

- Advertisement -

இது தொடர்பாக பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியத்தின் ஆப்ரேஷன் சேர்மன் ஜலால் யூனுஸ் கூறியிருக்கும் கருத்து கிரிக்கெட் உலகில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. முன்னதாக சிஎஸ்கே அணிக்கு தேர்வு செய்யப்பட்ட முஸ்தபிசுர் ரஹ்மான் இந்த வருட ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

சென்னை அணிக்காக 5 போட்டிகளில் விளையாடிய அவர் 10 விக்கெட் வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். இந்நிலையில் பங்களாதேஷ் அணி ஜிம்பாப்வே மற்றும் அமெரிக்காவுடன் டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது. இதற்காக மே ஒன்றாம் தேதியுடன் ஐபிஎல் தொடரிலிருந்து விலக இருக்கிறார் முஸ்தபிசுர் ரஹ்மான

முன்னதாக அவருக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஐபிஎல் தொடரில் விளையாட பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் அனுமதி வழங்கியிருந்தது. இதனைத் தொடர்ந்து சிஎஸ்கே மற்றும் பிசிசிஐ கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட அனுமதி மே ஒன்றாம் தேதி வரை நீட்டித்து புதிய உத்தரவை வழங்கியது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் நடைபெறும் போட்டியுடன் முஸ்தபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுகிறார். இது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் முஸ்தபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறுவது குறித்து பங்களாதேஷ் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஜலால் யூனுஸ் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர்” முஸ்தபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து கற்றுக் கொள்வதற்கு எதுவும் இல்லை. மேலும் சிஎஸ்கே அணி நிர்வாகம் அவரை 100% முழுமையாக பயன்படுத்துகிறது. அவர்களுக்கு முஸ்தபிசுர் ரஹ்மானின் உடல் தகுதி பற்றி கவலை இல்லை. ஆனால் பங்களாதேஷ் அணி முஸ்தபிசுர் ரஹ்மானின் உடல் தகுதியில் கவனம் செலுத்தும்” என்று தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஜிம்பாப்வே மற்றும் அமெரிக்கா அணிகளுடனான டி20 போட்டியில் விளையாடுவதற்காக மட்டும் முஸ்தபிசுர் ரஹ்மான் ஐபிஎல் தொடரிலிருந்து திரும்ப அழைக்கப்படவில்லை. அவருக்கு ஓய்வு கொடுத்து அவரது பணிச்சுமையை நிர்வாகிப்பதற்காக பெரும்பாலழைக்கப்பட்டிருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles