இந்திய அணியால்தான் என்ன டீம்ல இருந்து தூக்குனாங்க.. பின் இப்படித்தான் மீண்டு வந்தேன் – டிராவிஸ் ஹெட் பேட்டி

ஆஸ்திரேலியா அணியின் அதிரடி ஆட்டக்காரரான ட்ராவிஸ் ஹெட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவதோடு உலக கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து ஹெட் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர அதிரடி ஆட்டக்காரரான ட்ராவிஸ் ஹெட் டி20 கிரிக்கெட்டில் தொடக்க வீரராகவும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் மிடில் வரிசையிலும் களமிறங்கி விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக இந்திய அணிக்கு எதிரான போட்டிகளில் மிக ஆபத்தான வீரராக விளங்குகிறார். அதிலும் இந்திய அணிக்கு எதிராக விளையாடிய ஒரு நாள் உலகக் கோப்பை பைனலிலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் சிறப்பாக விளையாடி ஆஸ்திரேலியா அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்திருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் 2021ஆம் ஆண்டு இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் சுமாரான பங்களிப்பை வெளிப்படுத்திய நிலையில் ஆஸ்திரேலியா நிர்வாகம் இவரை அணியில் இருந்து நீக்கியது. அதற்குப் பிறகு உள்நாட்டு தொடரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் ஆஸ்திரேலியா அணியில் தன் இடத்தை உறுதி செய்தார். இந்த சூழ்நிலையில் தற்போது இந்திய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில் தான் மீண்டு வந்த விதம் குறித்து ஹெட் சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் விரிவாக பேசும் போது “நான் சிறப்பாக விளையாடாத காரணத்தால் ஆஸ்திரேலியா அணியில் சம்பள பட்டியலில் இருந்து நீக்கப்பட்டேன். அதற்குப் பிறகு இங்கிலாந்து சென்று அங்கு உள்நாட்டு தொடரில் விளையாடினேன். அங்கும் என்னுடைய பேட்டிங் டெக்னிக்கால் நான் திணறினேன். பிறகு ஒரு போட்டியில் 49 பந்துகளில் 46 ரன்கள் குவித்தேன். அந்தப் போட்டியை நான் ஓரளவு நன்றாக விளையாடியதாக எனக்கு உணர்த்தியது.

- Advertisement -

இதையும் படிங்க:புது ஐசிசி ஹைபிரிட் மாடல்.. பாவம் இந்திய அணி.. எங்களுக்கு தான் இதால லாபம்.. இருந்ததும் போச்சே உங்களுக்கு – பாகிஸ்தான் ஜாவேத் மியான்தத் பேட்டி

அப்போதெல்லாம் என்னுடைய பேட்டிங் டெக்னிக் குறித்து நான் அதிகம் கவலைப்பட்டேன். நான் களத்தில் நீண்ட நேரம் நிலைத்து நின்றால் என்னால் அதிக அளவில் ரன்கள் குவிக்க முடியும் என்று உணர்ந்தேன். ஆனால் இப்போதெல்லாம் அது குறித்து நான் கவலைப்படுவதில்லை. நான் களத்தில் இறங்கினால் என்னுடைய நோக்கம் ரன்கள் குவிப்பதில் மட்டும்தான் உள்ளது. எனவே எதைப் பற்றியும் கவலைப்படாமல் ரன்கள் குவிப்பது மட்டும்தான் நான் கவனம் செலுத்துகிறேன்” என்று பேசி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles