டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற உள்ள சூப்பர் 8 போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்திய அணி கிட்டத்தட்ட அரை இறுதிக்கு தகுதி பெற்ற நிலையில், ஆஸ்திரேலிய அணி இந்த போட்டியில் கட்டாயமாக வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் வீரரான உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலியா அணி இந்த போட்டியில் வெல்வது குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இந்த உலகக் கோப்பை தொடரில் அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று வீருநடை போட்டு வந்த ஆஸ்திரேலியா அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் எதிர்பாராத விதமாக தோல்வியை சந்தித்தது. கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட ஆஸ்திரேலியா தற்போது அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதிலேயே சிக்கல்கள் உருவாகியுள்ளது.
இதனால் இன்று நடைபெற உள்ள இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நிச்சயமாக ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும். ஆனால் இந்திய அணி பேட்டிங், பந்துவீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் தற்போது வலுவாக விளங்குகிறது. எனவே இந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்த இந்திய அணியை விட அதிக உழைப்பை போட்டால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் டெஸ்ட் வீரரான உஸ்மான் கவஜா ஆஸ்திரேலியா இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் டி20 உலக கோப்பையை நாங்கள் வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார். இதுகுறித்து கவாஜா விரிவாக கூறும்பொழுது “ஆஸ்திரேலியா இந்திய அணியை வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினால் நிச்சயமாக அவர்களால் இந்த தொடரை வெல்ல முடியும் என்று நான் நினைக்கிறேன்.
இதனால் நாங்கள் அரை இறுதிக்கு தகுதி பெற முடியும் என்று நினைக்கிறேன். பல ஆண்டுகளாகவே நாங்கள் ஒரு சிறந்த நாக் அவுட் அணி என்பதை நிரூபித்துள்ளோம். நாக் அவுட் சூழ்நிலைகளில் நாங்கள் வெற்றி பெற வாய்ப்பில்லாத போட்டிகளில் கூட வெற்றிகளை பெற்றுள்ளோம். ஆனால் நாங்கள் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டும். வார்னர் இந்த தொடரில் உயர் மட்ட கிரிக்கெட்டை விளையாடி வருகிறார்.
இதையும் படிங்க:உங்க 4 பேருக்கும் லாஸ்ட் சான்ஸ் தரேன்.. இந்த தடவையும் முடியலனா டீம விட்டு ஒதுங்கிருங்க.. கம்பீரின் அதிரடி முடிவு
அவர் விளையாடுவதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை எப்போதும் அச்சுறுத்தும் அணியாக இருந்து வருகிறது. அவர்களிடம் சிறந்த பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர், சிறந்த ஸ்பின்னர்கள் இருக்கின்றனர். இடது, வலது கை அனைத்து காம்பினேஷன்களிலும் வீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் உள்ளனர். அவர்களிடம் தொடரை வெல்வதற்கு தேவையான அனைத்து தகுதிகளும் உள்ளன. ஆனால் எங்களால் எந்த சூழ்நிலையிலும், எந்த அணியையும் வெற்றி பெற எங்களால் முடியும்” என்று கவாஜா கூறியிருக்கிறார்.

