எவ்வளவு பேர பார்த்து இருக்கேன்.. நானே சொல்றேன் ரிஷாப் பண்ட் அதுல என்ன விட பெஸ்ட் – கில்கிறிஸ்ட் பேட்டி

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையே நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் பங்களாதேஷ் அணி 158 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்திருக்கிறது. முன்னதாக இன்றைய நாளின் தொடக்கத்தில் இந்திய அணியின் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி சதம் எடுத்தனர். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மற்றும் அதிரடி வீரரான ஆடம் கில்கிரிஸ்ட், ரிஷப் பண்ட்டை வெகுவாக பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி சென்னை எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்திருந்தது. கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் களத்தில் இருந்தனர். இந்நிலையில் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று அதிரடியாக விளையாடிய கில் மற்றும் பண்ட் இருவரும் டெஸ்ட் போட்டியில் தங்களது சதத்தை பதிவு செய்தனர்.

- Advertisement -

இவர்களது அபாரமான ஆட்டத்தின் காரணமாக இந்தியா 287 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் இழந்து டிக்ளர் செய்தது. இதனைத் தொடர்ந்து பங்களாதேஷ் அணிக்கு 515 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய கில் 119 ரன்கள் உடன் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார். மேலும் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 128 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இது ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டிகளில் அடிக்கும் ஐந்தாவது சதமாகும். ரிஷப் பண்ட் கடைசியாக 2022 ஆம் வருடம் டிசம்பர் மாதம் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார்.

- Advertisement -

அந்த வருட இறுதியில் ஏற்பட்ட கார் விபத்தை தொடர்ந்து படுகாயம் அடைந்த அவர் காயத்திலிருந்து மீண்டு மே மாதம் நடைபெற்ற ஐபிஎல் தொடர் மூலம் மீண்டும் கிரிக்கெட் களத்தில் இறங்கினார் . இந்தியாவின் டி20 மற்றும் ஒரு நாள் அணிகளில் இடம் பெற்ற பண்ட் தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இடம் பெற்றார். முதல் இன்னிங்ஸில் 39 ரன்களில் ஆட்டம் இழந்த போதும் இரண்டாவது இன்னிங்ஸில் தனது அதிரடி ஆட்டத்தால் டெஸ்ட் போட்டிகளில் செஞ்சுரி அடித்தார் . ரிஷப் பண்ட் அடித்த இந்த சதம் கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னால் வீரர்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது அதிரடி பேட்டிங்கால் அனைவரையும் கவர்ந்தவர் ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆடம் கில்கிரிஸ்ட். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன இவர் ரிஷப் பண்ட் குறித்து வெகுவாக பாராட்டி இருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் கில்கிரிஸ்ட், ரிஷப் பண்ட் என்னை விட அதிரடியாக ஆடுகிறார். அவர் ஒரு கிளாசிக் பேட்ஸ்மேன். அவருக்கு பயம் என்பதே இல்லை. எந்த சூழலிலும் தனது அதிரடி ஆட்டத்தின் மீது அவருக்கு நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்தார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் போன்ற வீரர்களால் தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை காண அதிக ரசிகர்கள் வருகிறார்கள். ரசிகர்கள் டிக்கெட்க்கு கொடுக்கும் காசிற்கு தரமான ஆட்டத்தை ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் வழங்குகிறார்கள். ரிஷப் பண்ட் விளையாடுகிறார் என்றால் அந்தப் போட்டியை காண டிக்கெட் வாங்கிக் கொண்டு செல்வேன் என கில்கிரிஸ்ட் தெரிவித்துள்ளார். மேலும் ரிசப் பண்ட் ஒரு வெற்றியாளர் என்பது நமக்குத் தெரியும் . மேலும் அவர் போராட்ட குணம் மிக்கவர். கார் விபத்தில் இருந்து மீண்டு மறுபடியும் சர்வதேச கிரிக்கெட் விளையாட வந்திருப்பது அவருடைய போராட்ட குணம் மற்றும் தன்னம்பிக்கையை காட்டுகிறது.

மேலும் ஒரு இக்கட்டான சூழ்நிலையையும் நகைச்சுவை மூலம் எவ்வாறு கையாள முடியும் என்பதும் அவருக்கு தெரியும். அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் நல்ல மனிதர் என கில்கிரிஸ்ட் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் ரிஷப் பண்ட் 2,322 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 11 அரை சதம் மற்றும் 5 சதங்கள் அடங்கும். மேலும் இங்கிலாந்து, சவுத் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் தனது முதல் சுற்று பயணத்தின் போது சதம் அடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles