இந்திய அணிக்கு இதில் நன்மையே இல்லை.. கம்மின்ஸ் கருத்துக்கு எதிர் கருத்து கூறிய மிட்சல் ஸ்டார்க்

தற்போது நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றி வரலாறு படைத்தது. அடுத்ததாக மிகப்பெரிய கிரிக்கெட் தொடரான ஐபிஎல் தொடர் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி விளையாடியது குறித்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவரது கருத்துக்கு சக ஆஸ்திரேலியா வீரரான மிட்சல் ஸ்டார்க், மறுத்துப் பேசி இருக்கிறார்.

- Advertisement -

துபாய் மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபாயில் போட்டிகளை விளையாடிய இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது. ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி அரை இறுதி போட்டி வரை வந்து இந்திய அணி இடம் தோல்வியடைந்தது. அப்போது காயம் காரணமாக அந்த தொடர் முழுவதுமே பேட் கம்மின்ஸ் விளையாடவில்லை.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணி ஒரே மைதானத்தில் விளையாடுவதால் அவர்களுக்கு மற்ற அணிகளை விட அதிக நன்மை இருக்கிறது என்று பரபரப்பான கருத்து ஒன்றை பேசி இருந்தார். அவர் ஆரம்பித்து வைத்த விதத்தில் மற்றவர்களும் இதே கருத்தை இந்திய அணியின் மீது விமர்சனமாக வைத்து வந்தனர். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் சக வீரரான ஸ்டார்க் கம்மிஸ் கூறிய கருத்துக்கு எதிர் கருத்து கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் போது “ஒரே மைதானத்தில் விளையாடுவதால் கிரிக்கெட் வீரர்களுக்கு அது நன்மையாக இருக்குமா? என்று தெரியவில்லை. ஆனால் இந்திய வீரர்கள் பொறுத்தவரை ஐபிஎல் தொடர் மட்டுமே விளையாடுகிறார்கள். அவர்கள் உலகின் எந்த ஒரு லீக் தொடரிலும் விளையாடுவது கிடையாது. ஆனால் மற்ற நாட்டு கிரிக்கெட் வீரர்கள் உலகின் மற்ற பகுதிகளில் கிரிக்கெட் தொடர்கள் விளையாடி வருகிறார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க:மிஸ்டர் ஃபிக்ஸிட்.. கேஎல் ராகுல் கிளாசிக் வீரர்.. டெல்லி அணியுடன் விளையாட தயார்.. மிட்சல் ஸ்டார்க் உற்சாகம்

இந்திய அணி நல்ல கிரிக்கெட் விளையாடும் ஒரு அணியாக இருந்து வருகிறது. இந்திய ரசிகர்கள் இந்திய அணியை தலைசிறந்த அணி என்று கூறுவார்கள். ஆனால் ஆஸ்திரேலியா ரசிகர்கள் இந்திய ரசிகர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று ஸ்டார்க் பேசியிருக்கிறார். ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் ஆகியோர் இந்த ஐபிஎல் தொடரின் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles