சாம்பியன்ஸ் டிராபி.. பழசு மறக்குமா.. ஆஸ்திரேலியா எங்கள அப்படி நெனைக்க மாட்டாங்க.. ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜோனாதன் ட்ராட்

2025 ஆம் வருடத்தின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பரபரப்பான இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் 3 லீக் ஆட்டங்கள் மட்டுமே மீதமிருக்கும் நிலையில் குரூப் பி பிரிவில் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அணியை முடிவு செய்வதற்கான முக்கிய போட்டி இன்று லாகூரில் நடைபெறுகிறது.

- Advertisement -

இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. ஆஸ்திரேலிய அணி தனது முதல் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தியது இதனைத் தொடர்ந்து நடைபெற இருந்த ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பி பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தி அந்த அணியை தொடரிலிருந்து வெளியேற்றியது.

- Advertisement -

தற்போதிருக்கும் சூழலில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 3 அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளுடன் உள்ளன. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் ஆப்கானிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறும். மேலும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் அந்த அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல்முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்று வரலாறு படைக்கும்.

- Advertisement -

மேலும் சனிக்கிழமை நடைபெற இருக்கும் தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டியும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளின் அரையிறுதி வாய்ப்பை முடிவு செய்யும் என்பதால் சாம்பியன்ஸ் டிராபியில் தொடர்ந்து பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியை எந்த ஒரு அணியும் எளிதாக வெற்றி பெறும் அணியாக எடுத்துக் கொள்ளாது என அந்த அணியின் பயிற்சியாளர் ஜோனாதன் ட்ராட் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் பேசிய, அவர் கடந்த சில வருடங்களில் ஆப்கானிஸ்தான் அணி மிகப் பெரிய முன்னேற்றத்தை அடைந்திருப்பதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், ஆஸ்திரேலிய அணி எங்களை சிறிய அணியாக எடுத்துக் கொள்ளாது. ஏனெனில் நான் பயிற்சியாளராக பொறுப்பேற்றதிலிருந்து 3 முறை ஆஸ்திரேலிய அணியுடன் மோதி இருக்கிறோம். அந்த 3 போட்டிகளிலும் எங்களுக்கு வெற்றி பெற வாய்ப்பிருந்தது என தெரிவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் 2023 ஆம் வருட உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியை சுட்டிக்காட்டிய அவர், அந்தப் போட்டியில் தங்களது ஃபீல்டிங் தவறால் ஆஸ்திரேலிய அணியுடன் தோற்றோம் என குறிப்பிட்டார். மேலும் தங்கள் அணியில் இப்ராஹிம் ஜத்ரான், குர்பாஸ், குல்பதின் நயிப் போன்ற வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். நிச்சயமாக இன்று நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய அணியுடனான போட்டி எங்களது அணியின் வீரர்களுக்கு மிகச் சிறந்த அனுபவமாக அமையும் எனவும் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் முதல் தரத்தில் இருக்கும் அணிகளுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் ஆஸ்திரேலிய அணி தங்களை சிறிய அணியாக எடுத்துக் கொள்ளாது. அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனே எங்களை அணுகுவார்கள் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles