யார் என்ன சொன்னாலும்.. ஐபிஎல் தவிர வேற எங்கேயும் ஆட மாட்டேன்.. காரணம் இதுதான்..

ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்காக 6.80 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டு, அந்த அணிக்காக தனது சிறந்த பேட்டிங் திறமையையும் வெளிப்படுத்தியிருந்தார். அவர் 15 போட்டிகளில் 567 ரன்கள் குவித்து நான்கு அரை சதங்கள் மற்றும் ஒரு சதம் எடுத்து, ஐபிஎல் போட்டியில் நான்காவது அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பட்டத்தைப் பெற்றார்.

- Advertisement -

தற்போது அவர், இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) விளையாடுவதைத் தவிர, மற்ற எந்த ஃப்ரான்சைஸ் லீக்குகளில் பங்கேற்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று ஹெட் வலியுறுத்தியுள்ளார்.

- Advertisement -

ஐபிஎல் தவிர நான் விளையாட மாட்டேன்:

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன் செய்தியாளர்களிடம் ஹெட், “நான் IPL தவிர மற்ற பிராஞ்சைஸ் கிரிக்கெட்டை விளையாட மாட்டேன். Big Bash எனது மூன்றாவது அணி ஆகும், எனவே இதற்குப் பிறகு வேறு எதையும் விளையாட மாட்டேன், இவ்வாறு செய்வதால் எனக்கு ஓய்வுக்கான நேரம் அதிகமாகிறது.

- Advertisement -

தற்போது நடைபெற்று வருகின்ற போட்டி முடிந்ததும் எனக்கு எட்டு நாட்கள் ஓய்வு கிடைக்கிறது, அதை நான் உபயோகப்படுத்தவில்லை என்றால் MLC அல்லது The Hundred போன்ற தொடரில் விளையாடுவதும் மிகவும் கடினமாக இருக்கும். எனவே, அதை நான் புரிந்து கொள்கிறேன், இந்த சுற்றுப்பயணத்தில் அந்த ஏழு நாட்கள் ஓய்வு கிடைத்ததற்காக நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. இப்போது நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் எங்கள் அணிக்கு மிக முக்கியமானதாகும், எனவே அதில் என்னால் எவ்வளவு முயற்சி செய்ய முடிகிறதோ அதனைச் செய்ய விரும்புகிறேன்,” என்று தெரிவித்தார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles