இதுதாண்டா டீம்.. கோப்பையை ஆஸ்திரேலியா பேர்ல எழுதுங்க.. வெறித்தனமான டி20 உலக கோப்பை அணி வெளியீடு.!!

9-வது டி20 உலக கோப்பை போட்டிகள் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வைத்து வருகின்ற ஜூன் மாதம் 2 ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 29ஆம் தேதி முடிவடைய இருக்கிறது. 20 நாடுகள் பங்கு பெறும் இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதற்காக அனைத்து நாடுகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரை வீரர்கள் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி போட்டியாக பயன்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

உலக கோப்பையில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை அனைத்து நாடுகளும் வெளியிட தொடங்கி இருக்கிறது. உலகக்கோப்பை தொடரின் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை வெளியிடுவதற்கு இன்று கடைசி நாள் ஆகும். இதனால் உலக கோப்பையில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களது வீரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. இந்திய அணி டி20 உலக கோப்பை வீரர்களின் பட்டியலை நேற்று அறிவித்த நிலையில் ஆஸ்திரேலியா டி20 உலக கோப்பை போட்டியில் விளையாடும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

ஆஸ்திரேலிய டி20 அணியில் சமீபத்தில் விளையாடி வந்த முன்னணி வீரரான ஸ்டீவன் ஸ்மித் அனுபவ பந்துவீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் மற்றும் ஆல் ரவுண்டர் மேட் ஷார்ட் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. மேலும் தற்போது ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் இளம் வீரர் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்கிற்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

- Advertisement -

இடது கை சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஆஸ்டன் ஏகர் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார். இவர் தவிர அதிரடி ஆல் ரவுண்டர்கள் கிளன் மேக்ஸ்வெல் மார்கஸ் ஸ்டோனிஸ் மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் அணியில் இடம் பெற்றுள்ளனர். அனுபவ பந்துவீச்சாளர்களான பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரும் அணியில் இடம் பெற்றுள்ளனர்.

சமீபத்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்த டேவிட் வார்னர் டி20 உலக கோப்பை அணியில் இடம் பெற்று இருக்கிறார். மேலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் டிராவிஸ் டிராவிஸ் ஹெட் டேவிட் வார்னருடன் துவக்க வீரராக களம் இறங்க உள்ளார். 2020 ஆம் பொண்டாட்டி 20 உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முக்கிய காரணமாக அமைந்த மேத்யூ வேட் பெயரும் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக செயல்பட்ட மற்றொரு விக்கெட் கீப்பரான ஜோஷ் இங்கிலீஷ்ம் அணியில் இடம் பெற்றுள்ளார்.

- Advertisement -

கடந்த 2022 ஆம் வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற t20 உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணி அரையிறுதி போட்டிக்கு கூட தகுதி பெறாமல் முதல் சுற்று போட்டிகளிலேயே வெளியேறியது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை போட்டியை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் மிகவும் வலிமையான அணியை களம் இறக்கி இருக்கிறது. ஆஸ்திரேலியாவின் உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் தற்போது ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கிளன் மேக்ஸ்வெல் தவிர மற்ற வீரர்கள் நல்ல ஃபார்மில் உள்ளனர். வலுவான அணியை ஆஸ்திரேலிய களம் இறக்கி இருப்பதால் நிச்சயமாக இந்த வருடம் நடைபெறும் டி20 உலக கோப்பையை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர் . வர இருக்கின்ற டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணி தனது முதல் போட்டியில் ஓமான் அணிக்கு எதிராக ஜூன் 5-ஆம் தேதி களம் இறங்குகிறது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து நமீபியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளை எதிர்த்து விளையாடி இருக்கிறது.

2024 ஆம் வருட டி20 உலக கோப்பையில் விளையாடும் ஆஸ்திரேலியா அணி வீரர்கள் பட்டியல்:

மிட்செல் மார்ஷ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், டேவிட் வார்னர், ஆடம் ஜாம்பா

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles