AUS vs SL.. அப்பாடா ஜெயித்தது ஆஸ்திரேலியா.. 88 பந்துகள் மிச்சம் வைத்து அதிரடி வெற்றி.! புள்ளிகள் பட்டியலில் முன்னேற்றம்.!

தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் 14 வது போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் இன்று உத்தர பிரதேசம் மாநில லக்னோவில் வைத்து மோதின. இரு அணிகளும் இந்த தொடரின் முதல் வெற்றிக்காக போராடி வரும் நிலையில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் குஷால் மெண்டிஸ் பேட்டிங் தேர்வு செய்தார்.

- Advertisement -

அந்த அணிக்கு துவக்க வீரர்களான பதும் நிசாங்கா மற்றும் குஷால் பெரேரா இருவரும் சிறப்பான அதிரடி துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இவர்கள் இருவரும் முதல் விக்கெட் பார்ட்னர்சிப்பாக 21.4 ஓவர்களில் 125 ரன்கள் சேர்த்த நிலையில் சிறப்பாக ஆடி அரை சதம் எடுத்த நிசாங்கா 67 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து கமின்ஸ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார் . இவரைத் தொடர்ந்து பெரேராவுடன் ஜோடி சேர்ந்தார் குஷால் மெண்டிஸ். இந்த ஜோடியும் நிதானமாக ரன்களை சேர்த்தது. அணியின் ஸ்கோர் 157 ஆக இருந்தபோது அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த குஷால் பெரேரா 82 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் எடுத்த நிலையில் கம்மின்ஸ் பந்துவீச்சில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடி வந்த குஷால் மெண்டிஸ் 9 ரன்னிலும் சமர விக்கிரமா 8 ரன்னிலும் தனஞ்செயர் டிசில்வா 7 ரன்னிலும் வெல்லலாகே மற்றும் கருணரத்தினே 2 ரன்னிலும் தீக்ஷனா ரன் எதுவும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அந்த அணியின் சரித் அசலங்கா மட்டும் ஓரளவிற்கு தாக்கு பிடித்து விளையாடி 25 ரன்கள் எடுத்தார்.157 ரண்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே இழந்திருந்த இலங்கை அணி 29 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அடுத்த 52 ரன்களில் அந்த அணி ஒன்பது விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சி அளித்தது .

- Advertisement -

ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் ஆடம் ஜாம்பா 4 விக்கெட்டுகளும் மிச்சல் ஸ்டார்க் மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்களும் வீழ்த்தினர். இந்நிலையில் 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு 11 ரன்களில் அவுட் ஆகிய அதிர்ச்சி அளித்தார் டேவிட் வார்னர். இவரைத் தொடர்ந்து அதே ஓவரில் ஸ்டீவ் ஸ்மித் ரன் எதுவும் எடுக்காமல் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார். இவர்கள் இருவர் அறிவிக்கட்டையும் மதுசங்கா சிறப்பான பந்துவீச்சின் மூலம் வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து மிச்சல் மார்சுடன் ஜோடி சேர்ந்த லபஷேன் ஆஸ்திரேலியாவை ஆரம்பகட்ட சரிவிலிருந்து மீட்க போராடினர். அதிரடியாக விளையாடிய மிச்செல் மார்ஸ் தனது அரை சதத்தை பூர்த்தி செய்தார். 51 ரன்களில் மார்ச் ஆட்டம் இழந்த நிலையில் ஜோஷ் இங்கிலீஷ் களம் இறங்கி சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் லபஷேன் உடன் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப்பாக 77 ரன்கள் சேர்த்தனர்.

- Advertisement -

அணியின் ஸ்கோர் 158 ஆக இருந்தபோது 40 ரன்கள் எடுத்திருந்த லபஷேன் துரதிஷ்டவசமாக ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து அதிரடி வீரர் மேக்ஸ்வெல் களம் இறங்கினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த இங்கிலீஷ் தனது இரண்டாவது அறை சதத்தை பதிவு செய்தார். அவர் 59 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உடன் 58 ரங்கள் சேர்த்த நிலையில் ஆட்டம் இழந்தார். இறுதியில் மேக்ஸ்வெல் மற்றும் மார்க்கஸ் இருவரும் அதிரடியாக விளையாடி ஆஸ்திரேலியா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.35.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 21 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இவருக்கு துணையாக விளையாடிய மார்க்கஸ் 10 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உடன் 20 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன் மூலம் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த வெற்றியின் மூலம் அந்த அணி பத்தாவது இடத்தில் இருந்து இரண்டு இடங்கள் முன்னேறி எட்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது. இந்த அணி தனது அடுத்த போட்டியில் பாகிஸ்தானை சந்திக்க இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles