தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டி தொடரில் இன்றைய 39 வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மும்பையில் மோதின. அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்வதற்கு ஆஸ்திரேலியாவிற்கு இந்த போட்டி முக்கியமானது. அரை இறுதிப் போட்டிகளுக்கான வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதற்கு ஆப்கானிஸ்தான் அணிக்கும் இந்தப் போட்டியில் இன்றியமையாதது என்பதால் பரபரப்பாக தொடங்கியது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அந்த அணியின் துவக்க வீரரான ரஹ்மத்துல்லா குர்பாஸ் 21 ரன்களில் ஆட்டம் இழக்க மூன்றாவதாக களம் இறங்கிய ரஹமத் ஷா மற்றொரு துவக்க வீரரான இப்ராஹிம் ஜத்ரானுடன் இணைந்து இரண்டாவது விக்கெட்டிற்கு 84 ரன்கள் பார்ட்னர்ஷிப்பாக சேர்த்தார். இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு நல்ல அடித்தளம் அமைந்தது . இதனைத் தொடர்ந்து 44 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த ரஹ்மத் ஷா ஆட்டம் இழந்தார். மறுமுனையில் ஆடிய இப்ராஹிம் ஜத்ரான் சிறப்பாக விளையாடி இந்த உலகக் கோப்பையில் தனது இரண்டாவது அரை சதத்தை பதிவு செய்தார் .
மூன்றாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு கேப்டன் ஷகிதி மற்றும் இப்ராஹிம் ஜத்ரான் இருவரும் இணைந்து 54 ரன்கள் சேர்த்த நிலையில் ஷகிதி 26 ரன்னில் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து களம் இறங்கிய உமர்சாய் அதிரடியாக விளையாடி 22 ரன்னில் அவுட் ஆக இப்ராஹிம் தனது உலகக்கோப்பையில் முதல் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார். இவருடன் ஜோடி சேர்ந்த நபி 10 ரன்னில் அவுட் ஆனாலும் இப்ராஹிம் ஜத்ரான் உலகக்கோப்பை போட்டியில் தனது முதல் சதத்தையும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அது ஐந்தாவது சதத்தையும் பதிவு செய்தார். மேலும் ஆப்கானிஸ்தான் அணிக்காக உலகக்கோப்பையில் சதம் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
நபியின் விக்கெட்டை தொடர்ந்து ரஷீத் கான் இப்ராஹிம் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இறுதி ஓவர்களில் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை சிதறடித்தது. இவர்களது அதிரடியால் ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 291 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்திருந்தது. மிச்சல் ஸ்டார்க் வீசிய இறுதி ஓவரில் ரஷித் கான் 2 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரி எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்ராஹிம் ஜத்ரான் 143 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர் உடன் 129 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அதிரடியாக விளையாடிய ரசீத் கான் 18 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆக இருந்தார்.
ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சில் ஹேஷல் வுட் 2 விக்கெட்டுகளும் மிச்சல் ஸ்டார்க் மேக்ஸ்வெல் மற்றும் ஜாம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர் ட்ராவஸ் ஹெட் ரன் எதுவும் எடுக்காமல் நவீன் உல் ஹக் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து மிச்சல் மார்ஸ் 24 ரன்னிலும் டேவிட் வார்னர் 18 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அந்த அணியின் இங்கிலீஷ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து மார்னஸ் லபுசேன் 14 ரன்னில் ரன் அவுட் ஆனார்.
இவர்களைத் தொடர்ந்து மார்கஸ் ஸ்டாய்னிஸ் 6 ரன்னிலும் ஸ்டார்க் 3 ரன்னிலும் அவுட்டானதால் ஆஸ்திரேலியா 91 ரன்கள் 7 விக்கெட் இழந்து தடுமாறியது. இதனால் ஆப்கானிஸ்தான் அணி நிச்சயமாக வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதிரடி வீரரான கிளன் மேக்ஸ்வெல் கேப்டன் பேட் கம்மின்ஸ் உடன் இணைந்து ஆஸ்திரேலியா அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடினார். இந்த ஜோடி ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களை சிதறடித்தது. சிறப்பாக விளையாடிய மேக்ஸ்வெல் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்த உலகக் கோப்பையில் இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். அவருக்கு உறுதுணையாக பேட் கம்மின்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்.
கிளன் மேக்ஸ்வெல் கொடுத்த ஒரு சில வாய்ப்புகளை ஆப்கானிஸ்தான் வீரர்கள் தவறவிட்டது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. 8-வது விக்கெட்டுக்கு ஜோடியாக மேக்ஸ்வெல் மற்றும் பேட் கமின்ஸ் இருவரும் இணைந்து 201 ரன்கள் பார்ட்னர்ஷிப் எடுத்து ஆஸ்திரேலியா அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 128 பந்துகளில் 10 சிக்ஸர்கள் மற்றும் 21 பவுண்டரிகளுடன் 201 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவருடன் விளையாடிய பேட் கம்மின்ஸ் 68 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா மூன்றாவது அணியாக உலகக்கோப்பை போட்டிகளுக்கு தகுதி பெற்று இருக்கிறது. மேலும் துவக்க வீரர் இல்லாமல் மிடில் ஆர்டரில் களம் இறங்கி ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார். மேலும் பேட் கம்பெனிஸ் மற்றும் கிளன் மேக்ஸ்வெல் இருவரும் இணைந்து எட்டாவது விக்கெட்க்கு சேர்த்த 202 ரன்கள் ஒரு நாள் போட்டிகளில் எட்டாவது விக்கெட் ஜோடி சேர்த்து அதிகபட்ச ரன்கள் ஆகும். மேலும் மேக்ஸ்வெலின் இந்த இரட்டை சதம் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஆடப்பட்ட மிகச்சிறந்த இன்னிங்ஸ்.
இந்தத் தோல்வியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்புகளுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. அந்த அணி மீதி இருக்கும் தென்னாப்பிரிக்க அணியுடன் போட்டியில் அதிக நெட் ரன் ரேட் பெற்று வெற்றி பெற வேண்டும். நியூசிலாந்து அணி இலங்கை அணி உடனான போட்டியில் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு தகுதி பெற்று விடும். பாகிஸ்தான் அணியும் இங்கிலாந்து அணிவுடன் ஆன கடைசி லீக் போட்டியில் அதிக நெற்றன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்புகள் இருக்கிறது.

