கடைசி நொடியில் தான் தெரியும்.. அப்படி அவமானப்படுத்தினது தான் ஓய்வு பெற காரணம்.. எவ்வளவு நாள்தான் பொறுத்து போறது.. நான் தடுக்க விரும்பல – அஸ்வினின் அப்பா பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணியின் மூன்றாவது தொடர் நடைபெற்று இருந்த வேளையில், இந்திய அணியின் ஆஃப் பின்னரான ரவிச்சந்திரன் அஸ்வின் டிசம்பர் 18, புதன்கிழமை சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பிறகு வியாழக்கிழமை அன்று ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பினார் ரவிச்சந்திரன் அஸ்வின். கண்ணீருடன் சென்னை திரும்பிய அஸ்வினை சந்திக்க அவரின் தந்தையும் தாயும் சென்றிருந்தனர்.

- Advertisement -

அப்பொழுது அவர்கள், இந்தச் செய்தி தங்களுக்கும் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் அதிர்ச்சியாக இருந்தது என்பதை ஒப்புக்கொண்டு. ஒருவேளை அவன் பட்ட அவமானத்தினால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறியுள்ளார்.

- Advertisement -

எங்களுக்கும் அதைப்பற்றி தெரியாது:

அஸ்வின் தந்தை நியூஸ் 18 ஒன்றிடம் கூறியிருப்பதாவது, “அஸ்வினின் ஓய்வை குறித்து எங்களுக்கும் கடைசி நேரம் தான் தெரியவந்தது. அவனின் மனதில் என்ன எண்ணம் இருந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. அவர்தான் தனது ஓய்வை அறிவித்தார், அதையும் நாங்கள் முழு மனதுடனும் மகிழ்ச்சியுடனும் ஏற்றுக்கொண்டோம்.

- Advertisement -

ஆனால் அவர் ஓய்வு பெற்ற விதம், ஒருவிதத்தில் நாங்கள் மகிழ்ச்சி அடைந்தோம், ஆனால் மற்றொரு விதத்தில் நாங்கள் மகிழ்ச்சி அடையவில்லை, ஏனென்றால் அந்த தொடரை அவர் தொடர்ந்து இருக்க வேண்டும்”.

அவமானம் தான் ஒரு காரணமாக இருக்கும்:

மேலும் அவர், “சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது அவனது விருப்பமும் அவனது ஆசையும் கூட, அதில் நாங்கள் தலையிட முடியாது. ஆனால், அஸ்வின் கூறிய விதம்தான் எங்களுக்கு பிடிக்கவில்லை. ஓய்வு பெற பல காரணங்கள் இருக்கலாம், அது என்ன காரணம் என்று அஸ்வினுக்கு மட்டுமே தெரியும். ஒருவேளை, அவர் அந்தத் தொடரில் பெற்ற அவமானமாக கூட இருக்கலாம்” என்று கூறி முடித்தார், அஸ்வினின் தந்தை.

- Advertisement -

இதையும் படியுங்கள்: என்ன அஸ்வின் இப்படி பண்ணிட்டீங்க.. இவ்ளோ கிட்ட வந்துட்டு.. என்னோட இந்த சாதனையை முறியடிக்காம ரிட்டயர் ஆகிட்டீங்களே – அனில் கும்ப்ளே பேட்டி

பெர்த்தில் நடந்த தொடக்கப் போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்குப் பதிலாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவுக்கான பிங்க்-பால் டெஸ்டில் மட்டுமே அஷ்வின் இடம்பெற்றார். பிரிஸ்பேனில் நடந்த மூன்றாவது டெஸ்டில், அஷ்வின் மீண்டும் பெஞ்சில் தன்னைக் கண்டார், ரவீந்திர ஜடேஜா அணியில் தனது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles