பெங்களூர் அணிக்கு எதிரான முதல் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாக விளையாடி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற அஸ்வினின் பந்து வீச்சு முக்கிய காரணமாக அமைந்தது. அஸ்வின் பந்து வீசிக்கொண்டிருக்கும்போது விராட் கோலி உடன் நடந்த பேச்சுவார்த்தை குறித்து தற்போது பகிர்ந்திருக்கிறார்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய ராஜஸ்தான் அணி 174 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இரு வீரர்களுமே சரி சமமான பங்களிப்பை கொடுத்திருந்தாலும், ரவிச்சந்திரன் அஸ்வின் ஏற்படுத்திய தாக்கம் அபாரமானது.
குறிப்பாக மிடில் ஓவர்களில் களமிறங்கி ஸ்பின்னர்களை அடிக்கக்கூடிய பெங்களூர் அணியின் பட்டிதார் இந்தப் போட்டியில் அஸ்வினின் பந்துவீச்சில் ரன்களை குவிக்க சிரமப்பட்டார். அதற்குத் தகுந்தவாறு சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் அவரை பவுண்டரி லைன் பெரிதாக இருக்கும் பகுதிகளிலேயே ஆடவிட்டார். மேலும் பந்துகளை உடம்பை நோக்கி வீசி அவருக்கு அழுத்தம் கொடுத்தார்.
மிடில் ஓவர்களில் பெரும்பாலும் ரன்களை குவித்து தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி இந்த போட்டியில் அவ்வாறு ரன்களை குவிக்க முடியவில்லை. சிறப்பாக பந்து வீசி அஸ்வின் நான்கு ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினார். அந்த இரண்டு விக்கெட்டுகளும் கேமரூன் கிரீன் மற்றும் மேக்ஸ்வெல்லை அடுத்தடுத்து வெளியேற்றி திருப்புமுனை ஏற்படுத்தி கொடுத்தார்.
விராட் கோலிக்கும் இதே திட்டத்தை செயல்படுத்திய அஸ்வின் அது குறித்து போட்டிக்குப் பின்னர் கூறும் பொழுது
“நேற்று விராட் கோலி விளையாடி கொண்டிருக்கும்போது என்னுடைய ஓவரின் ஐந்தாவது பந்தில் எக்ஸ்ட்ரா கவரில் நின்று கொண்டிருந்த ஃபீல்டரை பௌண்டரி எல்லைக்கு அனுப்பினேன். மேலும் டீப் பாய்ண்ட்டில் இருந்த பில்டரை உள் வட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தினேன். அதனைப் பார்த்த விராட் கோலி ‘தற்காப்பாக இருக்கிறாய்’ என்று என்னிடம் கூறினார்.
இதையும் படிங்க:ஐபிஎல்லில் இருந்து விடை பெற்றார் தமிழகத்தின் தங்க மகன்.. தோனிக்கு அடுத்ததாக சாதனை பட்டியலில் தினேஷ் கார்த்திக்
மேலும் இனி வரும் தொடர்களில் இம்பாக்ட் பெயர் விதிமுறை நீக்கப்பட்டாலும் கூட பந்துவீச்சாளர்கள் அடித்து ஆடும் ஹிட்டர்களாக இருக்க வேண்டும். எனது கருத்துப்படி நல்ல ஆடுகளங்கள் போடப்படுகின்றன. நாங்கள் பந்து வீசுவதுடன் அதை நன்றாக அடித்து ஆடும் திறமையும் கொண்டிருக்க வேண்டும். எதிர்காலமும் இதை எதிர் நோக்கி தான் போய்க் கொண்டிருக்கிறது” என்று கூறியிருக்கிறார். ராஜஸ்தான் அணி தனது அடுத்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை இன்று எதிர்கொள்ள உள்ளது.

