ஆர்சிபி அணியில் ஆர்ச்சர்?. பெங்களூர் முகாமில் எடுத்து வரும் பயிற்சி.. காரணம் என்ன? குழப்பத்தில் ரசிகர்கள்

17வது ஐபிஎல் சீசன் வருகிற 22ஆம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இதற்காக ஆர்சிபிஅணி வீரர்கள் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வரும் வேளையில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் ஆர்சிபி அணியில் இணைய உள்ளாரா? என்ற குழப்பம் ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

- Advertisement -

டூப்ளஸ்சிஸ் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி இந்த முறை ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்பில் மிகத் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலியை தவிர மற்ற அனைத்து வீரர்களும் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். விராட் கோலி கலந்து கொள்ளாததற்கான காரணம் மட்டும் இன்னும் வெளிவரவில்லை.

- Advertisement -

இங்கிலாந்து அணி 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர் ஜோப்ரா ஆர்ச்சர். வெஸ்ட் இண்டீசைச் சேர்ந்த இவரது அதிவேக பந்துவீச்சு திறமையின் காரணமாக, இங்கிலாந்து அணி அதன் சட்டத் திருத்தங்களை மாற்றி குறுகிய காலத்திலேயே அவரை அணிக்குள் எடுத்தது.

- Advertisement -

இதன் விளைவாக இங்கிலாந்து அணி உலக கோப்பையை வெல்ல முக்கியப் பங்காற்றினார். இவரது திறமையை பாராட்டி இங்கிலாந்து அரசாங்கம் இவருக்கு ஒரு வீட்டினை பரிசாக வழங்கியுள்ளது. அப்போது நல்ல புகழில் இருந்த இவர், முழங்கை பாதிப்பால் அவதிப்பட்டு கிரிக்கெட் தொடர்களில் பங்கு பெறாமல் ஓய்வெடுத்து வந்தார்.

2022ஆம் ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி இவரை எட்டு கோடிக்கு வாங்கியது. அந்த வருடம் இவர் விளையாட மாட்டார் என்று தெரிந்த நிலையிலும், இவரது திறமையை கருத்தில் கொண்டு எதிர்காலம் கருதி அணிக்குள் எடுத்துக் கொண்டது. இவர் ஏற்கனவே அதற்கு முன்னர் ராஜஸ்தான் அணியில் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பின்னர் காயத்திலிருந்து மீண்டு 2023ஆம் ஆண்டு மும்பை அணிக்காக விளையாடிய இவர், இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். அதன் பிறகு அவரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை.

- Advertisement -

இந்நிலையில் சோப்ரா ஆர்ச்சர் தனது இங்கிலாந்து உள்ளூர் அணியான சக்சஸ் அணியுடன் இணைந்து பெங்களூரில் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இவர் ஆர்சிபி அணியில் இணையப் போகிறார் என்பது முற்றிலும் வதந்தியே. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க மைதானங்களின் சூழ்நிலை, இந்திய சூழ்நிலையுடன் ஒத்துப் போவதால் உலகக் கோப்பையைக் கருத்தில் கொண்டு பெங்களூரில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட்டின் நிர்வாக இயக்குனர் ராப் கீ கூறுகையில்,
“சோப்ரா ஆர்ச்சர் ஏப்ரல், மே மாதங்களில் இங்கிலாந்தில் இருந்தால் அவர் காயத்தில் இருந்து மீண்டு வர அவருக்கு உதவியாக இருக்கும். அவர் இங்கிலாந்துக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். ஏனெனில் இதற்குப் பிறகு உலகக் கோப்பை மற்றும் ஆசஸ் போன்ற முக்கிய தொடர்கள் உள்ளது” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles