தோனி டைம் முடிஞ்சுது.. இந்த வருஷம் அவர் ஐபிஎல் ஆடமாட்டாரு.. தோனிக்கு பதிலா இவர் இருக்காரே – அனில் கும்ப்ளே ஆச்சரிய தகவல்

ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா இந்த மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில் இதில் கலந்து கொள்ள உள்ள 10 அணிகளும் தீவிரமான முறையில் தயாராகி வருகின்றன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மகேந்திர சிங் தோனி குறித்து இந்திய முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி நீண்ட காலமாக விளையாடி வருகிறார். ஒரு கேப்டனாக அந்த அணிக்கு இதுவரை 5 ஐபிஎல் கோப்பைகளை வெற்றி பெற்றுக் கொடுத்த நிலையில் கடந்த ஆண்டு கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். எனவே அவருக்குப் பிறகு சிஎஸ்கே அணியின் இளம் வீரரான ருத்ராஜ் கெயிக்வாட்டுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு கேப்டனாக செயல்பட்ட அவர் சிஎஸ்கே அணியை நன்றாகவும் வழி நடத்தியுள்ளார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக மகேந்திர சிங் தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் 4 கோடி ரூபாய்க்கு அன் கேப்ட் பிளேயராக தக்க வைத்துள்ளது. எனவே இம்பாக்ட் பிளேயர் இன்னும் விதிமுறையை பயன்படுத்தி தோனி விளையாடலாம் அல்லது முழு நேர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆகவும் செயல்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே மகேந்திர சிங் தோனி கொடுத்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும்போது “ருத்ராஜ் கேப்டனாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்துவதால் மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு களமிறங்காமல் போவதற்கு கூட வாய்ப்புள்ளது. ஆனால் நாம் இம்பாக்ட் பிளேயர் மற்றும் தக்கவைப்பு விதிகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். அதனால்தான் மகேந்திர சிங் தோனி களம் இறங்காமல் இருந்தாலும் அணியில் ஒரு வீரராக தொடர முடியும்” என்று அவர் கூறியிருக்கிறார். மேலும் இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் போது ” சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய அத்தியாயம் தொடங்கி விட்டதாக நினைக்கிறேன். மேலும் தோனி அந்த அணியில் இடம் பெறாத ஒரு காலகட்டம் வந்துவிட்டதாகவும் தோன்றுகிறது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க:பார்ட்னர்ஷிப் உருவாக்கவில்லை.. சாதாரணமாக விக்கெட்டை கொடுத்துவிட்டேன்.. புலம்பி தள்ளிய பவுமா

இது தொடர்பாக டிவில்லியர்ஸ் பேசும்போது “கிரிக்கெட் விளையாட்டை பார்க்கவும், அதிலிருந்து உத்வேகம் பெறவும் மில்லியன் கணக்கான ரசிகர்களை மகிழ்வித்ததற்காக மகேந்திர சிங் தோனிக்கு அதற்குரிய மதிப்பை நாம் நிச்சயம் கொடுத்தாக வேண்டும். எனவே அது இன்னும் சில ஆண்டுகள் தொடரும் என்று நம்புகிறேன்” என டிவில்லியர்ஸ் கூறியிருக்கிறார். எனவே இந்த ஜாம்பவான்கள் கூறியதைப் போல தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? அல்லது சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் என்ன செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles