பார்ட்னர்ஷிப் உருவாக்கவில்லை.. சாதாரணமாக விக்கெட்டை கொடுத்துவிட்டேன்.. புலம்பி தள்ளிய பவுமா

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 362 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 312 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. 

- Advertisement -

பவுமா பேட்டி

- Advertisement -

இந்த தோல்வி காரணமாக தென் ஆப்பிரிக்கா அணி மீண்டும் ஐசிசி தொடரை வெல்ல முடியாமல் வெளியேறி இருக்கிறது. இந்த தோல்வி குறித்து தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டெம்பா பவுமா பேசும் போது, நியூசிலாந்து அணி நிர்ணயித்த இலக்கு மிகவும் பெரியது என்று கருதுகிறேன். ஒருவேளை 350 ரன்களாக இருந்திருந்தால், கூடுதல் நம்பிக்கையுடன் விளையாடி இருப்போம். 

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா அணிக்கு இன்று 1, 2 பார்ட்னர்ஷிப் மட்டுமே கிடைத்தது. ஆனால் நானும், வாண்டரும் தொடர்ந்து பேட்டிங் செய்திருக்க வேண்டும். அவர்கள் எப்படி வில்லியம்சன் – ரச்சின் இருவரும் பெரிய ஸ்கோரை பார்ட்னர்ஷிப் அமைத்தார்களோ, அதனை செய்திருக்க வேண்டும். நியூசிலாந்து அணி தொடக்கம் முதலே எங்களுக்கு அழுத்தம் கொடுத்தது. 

என் மீது தவறு

- Advertisement -

ரச்சின், வில்லியம்சன், மிட்சல் மற்றும் பிலிப்ஸ் ஆகிய 4 பேரையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். நாங்கள் 125 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த போது, நானும் வாண்டரும் விளையாடினோம். ஆனால் மிடில் ஆர்டர் வீரர்களுக்கு எங்களால் அடித்தளம் அமைத்து கொடுக்க முடியவில்லை. என் விக்கெட்டை சாதாரணமாக இழந்துவிட்டேன். வாண்டர் கொஞ்சம் கடினமாக விக்கெட்டை கொடுத்தார். 

நாங்கள் எதிரணி கம்பேக் கொடுக்க வாய்ப்பு அளித்துவிட்டோம். முக்கியமான தருணங்களில் ஆட்டத்தில் வெற்றிபெறுவதுமுக்கியம். அதனை தவறவிட்டுவிட்டோம் என்று தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா பவுலர்களின் செயல்பாடுகள் குறித்து பவுமா கொஞ்சம் கூட விமர்சிக்காதது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles