காவியா மாறன் & கம்மின்ஸ் ஆட்டம் முடிஞ்சது.. டீம்ல இவ்வளவு பெரிய முக்கிய பிரச்சினைய வைத்துக் கொண்டு எப்படி ஜெய்பீங்க ? அம்பத்தி ராயுடு பேச்சு

கடந்த ஆண்டு மிகவும் அதிரடியாக ஆடி பிரம்மாண்ட ஸ்கோர்களைக் குவித்த சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி, இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு ஜொலிக்கவில்லை. சீசனை ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான அபார வெற்றியுடன் தொடங்கிய சன்ரைசர்ஸ், அதன்பின் நான்கு போட்டிகளில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் தத்தளிக்கிறது.

- Advertisement -

சன்ரைசர்ஸ் அணியின் அதிரடியான பேட்டிங் அணுகுமுறை, கடைசி நான்கு போட்டிகளில் 190, 163, 120, 152 என்ற ரன்களைச் சேர்த்து தோல்வியிலேயே முடிந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா மீதான அதீத நம்பிக்கையும் பலனளிக்கவில்லை. பேட்டிங் ஒரு பக்கம் இருக்க, பவுலிங்கில் முகமது ஷமி, பாட் கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், ஆடம் ஸம்பா போன்ற சர்வதேச நட்சத்திரங்கள் இருந்தும் பந்துவீச்சு பிரிவு சொதப்பியது கவனிக்கத்தக்கது. இது குறித்து இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு, தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

- Advertisement -

அவர் கூறியதாவது, “ சன்ரைசர்ஸின் பந்துவீச்சு மிகவும் சுமாராக உள்ளது. மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை அழுத்தம் கொடுக்கும் பவுலர்கள் அவர்களிடம் இல்லை. நேற்றைய போட்டியில் குஜராத் அணியின் சாய் கிஷோர், ரஷீத் கான், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் எவ்வளவு அற்புதமாகச் செயல்பட்டு விக்கெட்டுகளை எடுத்தனர் எனப் பாருங்கள். ஆனால் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களோ விக்கெட் எடுப்பதை விட ரன்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க மட்டுமே பந்துவீசினர். சாதாரண பந்துவீச்சுடன் ஐ.பி.எலை வெல்ல முடியாது. ” என ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு முறையைச் சுட்டிக் காட்டியுள்ளார் அம்பாத்தி ராயுடு.

- Advertisement -

மேலும், ராயுடு கூறியது போலவே ஹைதராபாத் அணியின் தோல்விக்கும் குஜராத் அணியின் வெற்றிக்கும் இருக்கும் வித்தியாசம் மிடில் ஓவர்களில் இரு அணியின் பந்துவீச்சும் தான். குஜராத் சிறப்பாக பந்துவீசி அழுத்தம் கொடுத்து விக்கெட்டுகளை உரிய நேரங்களில் எடுத்தனர். ஆனால் இதில் ஹைதராபாத் அணி கோட்டை விட்டது. அதுமட்டுமில்லாமல், குஜராத் அணியின் வாஷிங்டன் சுந்தர் மற்றும் கில் இருவரின் பொறுப்பான ஆட்டமும் வெற்றிக்கு மிக முக்கியமாக அமைந்தது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles