இந்தியாவில் நடைபெற்று வரும் மிக முக்கிய சிவப்பு பந்து கிரிக்கெட் தொடரான துலீப் டிராபி தொடர் இன்று முதல் நடைபெற்று வருகிறது. ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடர் போல இதன் ஒவ்வொரு போட்டியும் நான்கு நாட்கள் நடைபெறும்.
இந்த சூழ்நிலையில் இந்த தொடரில் விளையாடும் ரிஷப் பண்ட் குறித்து கம்பீர் என்ன நினைக்கிறார் என்று ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான துலீப் டிராபி இன்று முதல் நடைபெற்று வருகிறது. இதன் அணிகள் முதலில் மண்டலங்களாக பிரிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நான்கு அணிக்கும் கேப்டன்களாக கில், ருத்ராஜ் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில் குரூப் பி பிரிவில் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ரிஷப் பண்ட் விளையாடுகிறார். ஆனால் மற்ற மூன்று பிரிவுகளில் இந்திய அணியின் இளம் வீரர்கள் கேப்டனாக பதவி வகிக்கும் போது அவர்களை விடவும் தற்போது இந்திய சர்வதேச அணியில் அதிக போட்டிகள் விளையாடி இருக்கிற ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்படாதது இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இடையே கேள்வியை எழுப்பி இருக்கிறது.
இது குறித்து அவர் விரிவாகக் கூறும்போது “துலீப் ட்ராபி தொடருக்கு ரிஷப் பண்ட் கேப்டன் ஆக நியமிக்கப்படவில்லை. அவர் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான குரூப் பி அணியில் விளையாடுகிறார். இதில் ஒன்றும் பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் இந்திய டெஸ்ட் அணிக்குக் கூட ரிஷப்பண்ட் கேப்டனாக தகுதி இல்லையா இது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ரிஷப் பண்ட் கேப்டன் ஆக நியமிக்கப்படாததால் எனக்கு இது உடன்பாடு இல்லை. தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற செனா நாடுகளில் சதம் அடித்த ஒரே விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் மட்டுமே. தற்போது இந்திய கிரிக்கெட்டில் ஒரு புதிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதனால் பண்ட் குறித்து கம்பீர் என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள நான் ஆர்வமாக இருக்கிறேன்.
இதையும் படிங்க:உண்மைய சொல்கிறேன்.. கம்பீர் இவ்வளவு சொல்லியும்.. கோலி ரோகித்தை துலிப் ட்ராபி ஆட வைக்காத காரணம் இதுதான் – ஜெய் ஷா பேட்டி
இதற்கு எடுத்துக்காட்டாக இலங்கை அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் பண்ட் விளையாடவில்லை. கே எல் ராகுல் 2 போட்டிகளில் விளையாட அவர் மூன்றாவது போட்டிக்கு தான் திரும்பினார்” என்று ஆகாஷ் சோப்ரா கூறுகிறார். ஐபிஎல் தொடரில் பண்ட் ஏற்கனவே டெல்லி அணிக்கு தலைமை தாங்கி வரும் நிலையில், உள்ளூர் தொடருக்கு அவர் கேப்டனாக அறிவிக்கப்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

