ஐபிஎல்-லைப் பொறுத்தவரை மிகவும் பலமான அணிகள் என்று கருதப்படுவது சென்னை, மும்பை மற்றும் பெங்களூர் அணிகள். அதிலும் சென்னை அணி ஒரு சில சீசன்களைத் தவிர மற்ற அனைத்து சீசன்களிலும் சிறப்பாக செயல்பட்டு பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடும்.
அதிலும் கேப்டன் தோனி தலைமையில் ஐந்து முறை சாம்பியன் ஆன அணி என்ற பெருமையும் பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னை அணியின் முக்கிய பலமாக கருதப்படுவது அவர்களின் சுழற் பந்துவீச்சு. பெரும்பாலும் லீக் போட்டிகளில் 7 போட்டிகள் சென்னையில் நடைபெறுவதால் அணியின் சுழற் பந்துவீச்சு எப்போதும் வலுவாக இருக்கும்.
முத்தையா முரளிதரன் தொடங்கி இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங் என முன்னணி சுழற் பந்துவீச்சாளர்கள் எப்போதும் ஆதிக்கம் செலுத்தக்கூடிய வழியிலேயே இருப்பார்கள். எனவே இம்முறையும் ஆறாவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் எம் எஸ் தோனி தலைமையில் அந்த அணி மீண்டும் வலுவாகவே களமிறங்குகிறது.
எனவே இம்முறையும் டைட்டிலை வெல்லும் என சென்னை ரசிகர்கள் கருதும் வேளையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா சென்னை அணியின் சுழற் பந்துவீச்சில் உள்ள குறைகள் குறித்து பேசி இருக்கிறார். ஆட்டத்தை மாற்றக்கூடிய பெரிய சுழற் பந்துவீச்சாளர்கள் சென்னை அணியில் இல்லை என்று கூறியிருக்கிறார். மேலும் ரவீந்திர ஜடேஜாவிடம் உள்ள சில குறைகள் குறித்தும் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து தெளிவாக ஆகாஷ் சோப்ரா கூறுகையில்
“தற்போதுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுழற் பந்துவீச்சில் சில குறைகள் இருக்கிறது. அந்த அணியில் பெரிய சுழற் பந்துவீச்சாளர் என்று எடுத்துக் கொண்டால் ஜடேஜாவை தவிர வேறு யாரும் இல்லை. எனவே இது வெளிநாட்டு பேட்ஸ்மேன்களுக்கு சற்று நெருக்கடியை குறைக்கும் வகையில் இருக்கும்.
ஏனெனில் வெளிநாட்டு வீரர்கள் பொதுவாகவே வேகப்பந்து வீச்சுக்கு மட்டுமே ஆடிப் பழக்கப்பட்டவர்கள் என்பதால் சுழற் பந்துவீச்சு அவர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே சிஎஸ்கே அணியிடம் இந்த குறை உள்ளது. மேலும் ஜடேஜாவும் தற்போதுதான் டெஸ்ட் போட்டியை முடித்துவிட்டு சென்னை அணிக்கு திரும்பி இருக்கிறார். ஒரு நாள் போட்டியிலும் சிறப்பாக செயல்படும் ஜடேஜா டி20 கிரிக்கெட் பொறுத்த வரை கடைசி வரிசையில் தான் பேட்டிங்கில் களம் இறங்குகிறார்.
எனவே அவரிடமிருந்து சிறந்த பேட்டிங் மற்றும் சிறந்த பந்துவீச்சனை தோனி வெளிக்கொண்டு வருவார் என்று நம்புவோம்”என்று கூறி முடித்திருக்கிறார். மேலும் தற்போதுள்ள சென்னை அணியைப் பொறுத்தவரை சுழற் பந்துவீச்சாளர்களாக இருப்பது மொயின் அலி, ரச்சின் ரவீந்தரா, ஜடேஜா, தீக்ஷனா.
மேலும் இந்திய அணியில் அறிமுகமாகாத வீரர்களான அஜய் மண்டல், நிசாந்த் சோலங்கி போன்ற சுழற் பந்து வீச்சாளர்களும் சென்னை அணியில் உள்ளனர். இப்படி இருக்க தோனி ஜடேஜாவைத் தவிர மற்ற சுழற் பந்து வீச்சாளர்களை யாரும் அணியில் எடுத்தது என்பது இதுவரை கிடையாது. அப்படி இருக்க எந்த வகையில் ஆகாஷ் சோப்ரா சிஎஸ்கே வில் குறைகள் இருக்கிறது என்று கூறியுள்ளார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

