கில் விளையாடலனா தயவு செஞ்சு அவரை சேருங்க.. 7வது வீரரா அவரை சேர்த்து வேஸ்ட் பண்ணாதீங்க.. ஆகாஷ் சோப்ரா பேட்டி

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று துவங்க உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டனான சுப்மான் கில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் அவருக்கு பதிலாக இந்திய அணியில் யார் விளையாட வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா ஒரு யோசனை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரை விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்கனவே வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட சுளுக்கு காரணமாக அணியின் கேப்டன் சுப்மான் கில் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகமாக உள்ளது. இந்த சூழ்நிலையில் அவருக்கு பதிலாக இடது கை ஆட்டக்காரர் சாய் சுதர்சன் அல்லது படிக்கல் ஆகியோரில் ஒருவர் விளையாடலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறும் போது “இன்றைய போட்டியில் கில் ஒரு வேலை விளையாட முடியாவிட்டால் அவருக்கு பதிலாக ருதுராஜ் கெயிக்வாட்டை சேர்க்க வேண்டும். அவர் தற்போது ரஞ்சி டிராபி மற்றும் துலீப் டிராபி என சிறப்பாக விளையாடி ரன் மழை பொழிந்து வருகிறார். சாய் சுதர்சன் மற்றும் படிக்கல் ஆகியோரில் ஒருவரை சேர்ப்பது நல்லதல்ல. ஏனென்றால் இந்திய அணியில் ஏற்கனவே ஆறு இடது கை ஆட்டக்காரர்கள் இருக்கும்போது ஏழாவது ஒருவரை சேர்ப்பீர்களா? என்று அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles