AFG vs NED.. 31.3 ஓவர்களில் ஆப்கான் அதிரடி வெற்றி.. நியூசிலாந்து மற்றும் பாக்-கிற்கு புதிய சவால்..WC பாயிண்ட்ஸ் டேபிள் நிலை என்ன.!

தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் 34 வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று மோதின. ஆப்கானிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்புகள் உயிர்ப்புடன் இருப்பதற்கு இந்த போட்டி முக்கியமானதாகும். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய நெதர்லாந்து அணியின் துவக்க வீரர் விக்ரம்ஜித் சிங் ஒரு ரன்னில் அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து மற்றொரு வீரரான மேக்ஸ் டவுட் மற்றும் கோளின் ஆக்கர்மேன் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு நெதர்லாந்து அணிக்கு நல்ல ஒரு அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். மேலும் இரண்டாவது விக்கெட்டுக்கு பார்ட்னர்ஷிப்பாக 70 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் மேக்ஸ் டவுட் 40 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகளுடன் 42 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார் இவரை தொடர்ந்து மேற்கொண்டு 19 ரன்கள் சேர்த்த நிலையில் ஆக்கர் மேன் 29 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

- Advertisement -

இவர்களைத் தொடர்ந்து களம் இறங்கிய கேப்டன் எட்வர்ட்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பரின் சிறப்பான திறமையினால் ஆட்டம் இழந்து வெளியேறினார். அதன் பிறகு களம் இறங்கிய பஸ் டி லீட் 3 ரன்னிலும் ஷாஹிப் சுல்பிகர் 3 ரன்னிலும் வான் பீக் 2 கண்ணிலும் அவுட் ஆகி வெளியேறினர. அந்த அணியின் சைப்ரண்ட் ஏங்கள்பிரட் சிறப்பாக ஆடி அரை சதம் எடுத்தார். அவரும் 86 பந்துகளில் ஆறு பவுண்டரிகளுடன் 58 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து வாண்டர் மெர் வே 11 ரன்னிலும் வான் மீக்கெரண் நாலு ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் நெதர்லாந்து அணி 46.3 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சில் முகமது நபி 3 விக்கெட்டுகளும் நூர் அகமது 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். நெதர்லாந்து அணியின் நான்கு வீரர்கள் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணியின் துவக்க வீரர்களான ரஹ்மத்துல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜத்ரான் இருவரும் முறையே 10 மற்றும் 20 ரன்களில் ஆட்டம் இழக்க ரஹ்மத் ஷாவுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் ஷஹீதி. இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி ஆப்கானிஸ்தான் அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றது. சிறப்பாக விளையாடிய ரஹ்மத் ஷா இந்த உலகக் கோப்பையில் தனது மூன்றாவது அறை சத்தத்தை பதிவு செய்தார். மேலும் அவர் தொடர்ந்து மூன்று போட்டிகளில் அரை சதம் எடுத்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவர்கள் இருவரும் மூன்றாவது விக்கெட்டிற்கு ஜோடியாக 74 ரன்கள் சேர்த்த நிலையில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ரஹ்மத் ஷா 54 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து ஆல்ரவுண்டர் ஓமர்சாய் கேப்டன் ஷஹீதியுடன் களத்தில் இணைந்தார். இந்த ஜோடி மேற்கொண்டு விக்கெட்டுகள் விழாத வண்ணம் தங்களது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அதே நேரத்தில் நெட் ரன் ரேட்டை கருத்தில் கொண்டு அதிரடியாகவும் விளையாடினர்.

- Advertisement -

இவர்கள் இருவரது சிறப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணி 31.3 ஓவர்களில் 181 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்து நெதர்லாந்து அணியை வீழ்த்தி நடப்பு உலக கோப்பையில் தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. கேப்டன் ஷஹிதீ சிறப்பாக ஆடி 64 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். இவருடன் அதிரடியாக வாடிய ஒமர்சாய் 28 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 31 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆக களத்தில் நின்றார். நெதர்லாந்து அணியின் பந்துவீச்சில் வான் பீக் வாண்டர் மெர் வே மற்றும் சுல்பிகார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்த உலகக்கோப்பை க்கு முன்பு வரை ஆப்கானிஸ்தான் அணி உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றிருந்தது. தற்போது இந்த உலகக் கோப்பையில் இங்கிலாந்து பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை தொடர்ந்து நெதர்லாந்து அணியையும் வீழ்த்தி நான்கு வெற்றிகள் பெற்றிருக்கிறது. இதன் மூலம் அந்த அணி 8 புள்ளிகள் உடன் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இனி நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளை எதிர்த்து விளையாட இருக்கிறது. அந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் நிச்சயமாக ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. தற்போது ஆஸ்திரேலியா நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 8 புள்ளிகள் பெற்று இருக்கின்றன. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நல்ல நெட் ரன்ரேட் வைத்திருப்பதால் அந்த அணிகள் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் இருக்கிறது. நாளைய போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் பட்சத்தில் அந்த அணி 10 புள்ளிகள் பெரும். நாளை நடைபெறும் மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணியை வீழ்த்தினால் 10 புள்ளிகள் பெற்று தனது மூன்றாவது இடத்தை தக்க வைத்துக் கொள்ளும். பாகிஸ்தான் நியூசிலாந்தை நல்ல ரென்றையுடன் வீழ்த்தினால் அந்த அணி முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறுவதற்கு வாய்ப்பாக அமையும். பாகிஸ்தான் தோல்வியடையும் பட்சத்தில் உலகக்கோப்பையில் இருந்து வெளியேறும் சூழலுக்கு தள்ளப்படலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles