பும்ரா மாதிரியான பவுலரை வெச்சிகிட்டு.. மும்பை இந்தியன்ஸ் ஏன் இவ்வளவு பெரிய முட்டாள்தனம் பண்ணுதுன்னு தெரியல – இந்திய முன்னாள் வீரர் ஆதங்கம்

நேற்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீசி 220 ரன்கள் வரை விட்டுக் கொடுத்தது. அதற்குப் பிறகு பேட்டிங் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 19.1 அவர்களின் வெற்றி இலக்கை அடைந்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி வலுவான பவுலிங் யூனிட் கொண்டிருந்தும் 220 ரன்கள் வரைக்கும் விட்டுக் கொடுத்தது ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இது குறித்து பேசி இருக்கும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்தும் 220 ரன்கள் வரை விட்டுக் கொடுத்ததற்கான காரணம் குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “மும்பை இந்தியன்ஸ் அணி தனது பந்து வீச்சில் நிறைய தவறுகள் செய்தது. ஜஸ்பிரித் பும்ரா போன்ற ஒரு வீரர் அணியில் இருந்தும் 220 ரன்கள் வரை விட்டுக் கொடுத்தது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத விஷயமாகும். மேலும் மும்பை அணியை பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா இருவர் மட்டுமே தொடர்ந்து இரண்டு ஓவர்கள் வீசி இருக்கிறார்கள். மேலும் பவர் பிளே முடிவதற்குள் சுழற் பந்துவீச்சாளர்களை கொண்டு வந்ததற்கான அவசியம் என்ன? எனவே இது மும்பை இந்தியன்ஸ் அணிகளின் பெரிய தவறுகள் ஆகும்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles