ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆனது இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் கோப்பையை கைப்பற்றுவதற்கு 10 அணிகளும் மிகவும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த சூழ்நிலையில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா ஐந்து முறை ஐபிஎல் பட்டங்களை வெற்றி பெற்றிருக்கும் நிலையில் மீண்டும் ஒருமுறை வெற்றி பெறுவதற்கு தங்களது அணிகளை தயாராக்கி வருகின்றன.
இந்த சூழ்நிலையில் நடப்பு சாம்பியன் ஆன ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணி இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்ற போராடும் நிலையில் மீதமுள்ள ஏழு அணிகளும் இந்த ஐபிஎல் ரேஸில் வலுவாக குதிக்கின்றன. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா இந்த ஐபிஎல் தொடரில் எந்த நான்கு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் என்பதை கணித்திருக்கிறார். இதில் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அவர் கூறும் போது “என்னை பொருத்தவரை இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று நம்புகிறேன். மேலும் இந்த நான்கு அணிகளுமே வலுவாக இருப்பதால் இந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்று உறுதியாக என்னால் கூற முடியாது. எனவே இந்த நான்கு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளன” என்று அவர் பேசியிருக்கிறார். இதில் அவர் சென்னை அணியை தேர்ந்தெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

