மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையேயான 25வது ஐபிஎல் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது.
டாசை இழந்த பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்ய விராட் கோலி இந்த முறை எதிர்பாராத விதமாக மூன்று ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். அப்போதே பெங்களூர் அணி குறைந்த இடங்களில் சுருண்டு விடுமோ? என்ற பயம் இருந்தது. அதற்குப் பின்னர் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பாப் டு பிளசிஸ் நிதானமாக விளையாடி பெங்களூர் அணியை கரை சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டார் 40 பந்துகளில் 61 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.
அதன்பிறகு ராஜப்பட்டிதார் 50 ரன்களும், தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 53 ரன்களும் குவித்தனர். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. மும்பை அணித்தரப்பில் பும்ரா அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் 197 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தொடக்க ஜோடி சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. முதல் விக்கட்டுக்கு 101 ரன்கள் குவித்த நிலையில் இசான் கிசான் ஆட்டம் இழந்தார். 69 ரன்களில் அவர் ஆட்டம் இழந்த நிலையில் அதற்கு பிறகு களம் இறங்கிய சூரியகுமார் யாதவ் 52 ரன்கள் குவித்தார். இறுதியாக அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக விளையாடி 21 ரன்கள் குவித்ததன் மூலம் மும்பை அணியை வெற்றி பெற வைத்தார்.
இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது. மும்பை அணியை வெற்றி பெற வைத்த போதிலும், இந்த முறையும் மைதானத்தில் இருந்து ரசிகர்கள் பாண்டியவுக்கு எதிராக கூச்சலிடுவதை நிறுத்தவில்லை. அப்போது பவுண்டரி எல்லைக்கு அருகே நின்று கொண்டிருந்த பெங்களூர் அணி வீரர் விராட் கோலி, மைதானத்தில் இருந்த ரசிகர்களை பார்த்து பாண்டியாவுக்கு எதிராக கரகோஷம் போடுவதை நிறுத்துங்கள்.
அவரும் இந்திய வீரர் தானே. அவரை ஆதரிங்கள் அவருக்கு எதிராக கூச்சலிடாதீர்கள் என்பது போல ரசிகர்களிடம் சைகையை காட்ட, விராட் கோலியின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்த ரசிகர்கள் பிறகு அவருக்கு எதிராக கரகோஷம் போடுவதை நிறுத்திக் கொண்டனர். இதே போல விராட் கோலி ஒரு முறை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டிருக்கும்போது ஸ்டீவ் ஸ்மித்துக்கு எதிராக ரசிகர்கள் கரகோஷம் எழுப்பும்போது இதேபோல அமைதியாக இருக்கும் படி ரசிகர்களை கேட்டுக் கொண்டிருப்பார்.
இதையும் படிங்க:வெறும் யார்க்கர் மட்டும் பத்தாது.. நிறைய வேரியேஷன்கள் வேண்டும்.. மும்பை வீரர் பும்ரா பேட்டி
தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், விராட் கோலியின் இந்த செயல்பாடு ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறது. போட்டி முடிந்த பிறகு விராட் கோலி ஹர்திக் பாண்டியாவை கட்டிப்பிடித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Kohli not appreciating the booing of hardik by Wankhede crowd. Telling them to cheer and reminding them he's an India player #MIvsRCB 👌 pic.twitter.com/ok5SYa3AkA
— Vighnesh Rane (@Vighrane01) April 11, 2024

