இன்று டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 185 ரன்கள் துரத்திய கத்துக்குட்டி நேபாள் அணி 180 ரன்கள் எடுத்து சிறப்பாக போராடி பல இதயங்களை வென்று இருக்கிறது. ஒரு கட்டத்தில் நேபால் அணி இங்கிலாந்து அணியை வென்று இந்த உலகக் கோப்பை தொடரில் அதிர்ச்சியை கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் கடைசி ஓவரை சாம் கரன் சிறப்பாக வீச இங்கிலாந்து தப்பி பிழைத்தது.
இதுகுறித்து நேபாள் கேப்டன் பேசும்பொழுது “இந்த போட்டியை எடுத்துக் கொண்டால் நாங்கள் தோற்று விட்டோம். ஆனால் நாங்கள் மூன்று துறைகளிலும் கடுமையான உழைப்பை கொடுத்திருக்கிறோம். இறுதிக்கட்ட ஓவர்களை வீசுவதற்கு நாங்கள் மட்டுமல்ல இங்கிலாந்து சிரமப்பட்டு இருக்கிறது. இதில் நாங்கள் இன்னும் முன்னேற்றம் அடைய வேண்டும். தாங்கள் கடைசி ஐந்து ஓவருக்கு 50 ரன்கள் அல்லது 60 ரன்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டோம். அதை நோக்கியே நாங்கள் பேட்டிங் செய்தோம்”
“மேலும் இந்தத் தொடருக்கு நாங்கள் சும்மா வரவில்லை. எங்களை யாரும் எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. நாங்களும் யாரையும் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். இதுதான் நாங்கள் சொல்லும் செய்தி. எங்களுடைய ரசிகர்கள் மிகவும் கிரிக்கெட்டில் ஆர்வம் உடையவர்கள். அவர்கள் எங்களை ஆதரிப்பதற்காக நாட்டிலிருந்து திரண்டு வந்திருக்கிறார்கள். நாங்கள் இந்த போட்டியில் அவர்களுடைய நம்பிக்கையை சுமந்து சென்று இருக்கிறோம். மேலும் எங்கள் செயல்பாட்டால் எங்கள் நாடு பெருமை அடைந்து இருக்கும் என்று நம்புகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.

