தயவு செஞ்சு கில்லை தூக்காதீங்க.. நான் சொல்ற மாதிரி மட்டும் செஞ்சா.. அவர் வேற லெவல் வருவாரு – டிவில்லியர்ஸ் நம்பிக்கை

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில்லை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் பேசி வருகிறார்கள்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான ஏபி டிவில்லியர்ஸ் அவசரப்பட்டு அவரை அணியில் இருந்து நீக்க வேண்டாம் எனவும் அவரை தொடக்க வரிசையில் இருந்து மூன்றாவது வரிசைக்கு மாற்றுங்கள் என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறும் போது “சுப்மன் ஒருமுறை அல்லது இரண்டு முறை தோல்வி அடைந்து விட்டார் என்பதற்காக நாம் இப்போது அவரை மாற்றுவது குறித்து பேசி வருகிறோம். அவரிடம் சற்று பொறுமையாக இருங்கள். இந்திய அணியில் ஆக்ரோஷமான வீரர்களாக அனைவரும் இருப்பதால் அவரைப் போன்ற ஒருவர் தேவை. ஜெய்ஸ்வால் சிறந்தவர் தான் ஆனால் அவரை தொடக்க இடத்தில் மாற்றிவிட்டு கில்லை மூன்றாவது இடத்திற்கு நகர்த்த வேண்டும். எனவே இரண்டு இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பதால் பந்து வீச்சாளர்களை சுலபமாக கையாளலாம். மேலும் பெரிய போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடக்கூடியவர்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles