வெறும் 87 ரன்.. 3 போட்டி இருக்கு.. விராட் கோலியின் மகத்தான சாதனையை உடைக்க காத்திருக்கும் அபிஷேக் ஷர்மா முழு விபரம்

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில் இதில் இரண்டு போட்டிகள் ஏற்கனவே முடிவடைந்து இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளன. மேலும் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே மூன்றாவது போட்டி நாளை நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா இன்னும் மூன்று போட்டிகளில் 87 ரன்கள் எடுப்பதன் மூலமாக விராட் கோலியின் சிறப்பான சாதனை ஒன்றை உடைக்க தயாராக இருக்கிறார். அதாவது ஒரு காலண்டர் ஆண்டில் சர்வதேச டி20, ஐபிஎல் மற்றும் சையது முஸ்தாக் அலி என மூன்று விதமான டி20 தொடரில் விளையாடி வரும் அவர் இதுவரை 39 போட்டிகளில் விளையாடி39 போட்டிகளில் விளையாடி 1533 ரன்கள் குவித்திருக்கிறார்.

- Advertisement -

இதற்கு முன்பாக விராட் கோலி 2016ஆம் ஆண்டில் 31 போட்டிகளில் 1614 ரன்கள் குவித்ததை அதிகபட்ச சாதனையாக இருந்து வருகிறது. அந்த ஆண்டு விராட் கோலி ஐபிஎல் தொடரில் மட்டும் 973 ரன்கள் குவித்ததை மறக்க முடியாது. எனவே அபிஷேக் ஷர்மா இந்த வருடத்திற்குள் மூன்று போட்டிகளில் விளையாடி விராட் கோலியின் சாதனையை உடைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles