இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே கடந்த புதன் கிழமை நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 ரன்கள் குவித்தும் தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு முக்கிய காரணம் ரவீந்திர ஜடேஜா இறுதி கட்டத்தில் பேட்டிங் செய்த விதம் சரியில்லை என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் பேசியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “300 ரன்கள் கடந்து ஒரு அணி இறுதிக்கட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது பேட்ஸ்மேன் ஒருவர் 88 பேட்டிங் சராசரியில் விளையாடுவது சரி கிடையாது. ரவீந்திர ஜரேஜா இன்னும் அதிரடியாக விளையாடி இருக்க வேண்டும். இது நான் போட்டி நடைபெற்று முடிந்த பிறகு சொல்லவில்லை. அவர் விளையாடிக் கொண்டிருக்கும் போதே கிரிக்கெட் கமெண்ட்ரியில் நான் கூறி இருக்கிறேன்.
இந்த இலக்கு இந்திய அணி வெற்றி பெறுவதற்கு சரியாக அமையாது என்று நான் கூறியிருந்தது உண்மையானது. அந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா இன்டெண்ட் காட்டிய விதம் சரியில்லை. அவர் இன்னும் அதிரடியாக விளையாடியிருக்க வேண்டும்” என்று இர்பான் பதான் பேசியிருக்கிறார்.

