இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து இருந்தாலும் விராட் கோலியின் சதமானது சற்று ஆறுதல் அளிக்கக் கூடிய விஷயமாக அமைந்தது.
இந்த சூழ்நிலையில் விராட் கோலி தற்போது டி20 மற்றும் டெஸ்ட் ஃபார்மேட்டில் இருந்து ஓய்வு பெற்று
தற்போது ஒரு நாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். நேற்றைய போட்டியில் சதம் அடித்ததன் மூலமாக விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 84 சர்வதேச சதங்கள் அடித்து இருக்கிறார். மேலும் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் கோப்பை தொடர் வரை விராட் கோலிக்கு மொத்தமாக 40 ஆட்டங்கள் இருக்கின்றன.
இதனால் விராட் கோலி எப்படியும் 100 சதங்கள் அடித்து சச்சின் சாதனையை முறியடிக்க கூடும் என்று ஆகாஷ் சோப்ரா கருதுகிறார். இதுகுறித்து அவர் கூறும் போது “விராட் கோலி இப்போது அடுத்தடுத்த சதங்கள் எடுத்திருக்கிறார். அவர் சதங்களின் சக்கரவர்த்தி. அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் இன்னும் பதினாறு சதங்கள் பின்தங்கி உள்ள நிலையில் 2027 உலக கோப்பை வரை இன்னும் 40 ஆட்டங்கள் மீதம் உள்ளன. எனவே அவர் 100 சதங்கள் நிச்சயமாக எட்ட முடியும் என்று பேசி இருக்கிறார்.

