இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க தொடருக்குப் பிறகு விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் கிரிக்கெட் எதிர்காலம் குறித்து இந்திய தலைமை தேர்வு குழு விவாதிக்கும் என்ற கருத்துக்கள் வெளிவந்துள்ள நிலையில் தற்போதைய விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் ஆட்டம் இதனை தவிடு பொடி ஆக்கியுள்ளது.
மேலும் விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோரிடையே கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி முடிவடைந்த பிறகு, விராட் கோலி டிரெஸ்ஸிங் ரூமுக்குள் செல்லும் போது கௌதம் கம்பீரை கண்டும் காணாமல் செல்வது போன்ற காட்சி அவர்களிடைய கருத்து வேறுபாடுகள் நிலவுவது உண்மைதான் என்கிற விஷயத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக இந்த மூவரும் நேரடியாக பேசிக் கொள்ளாத நிலையில் இவர்களுக்கு தகவல் பரிமாற்றாளாராக இந்திய முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் பிரக்யான் ஓஜாவை இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி இருக்கிறது. கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரது கருத்துக்கள் ஓஜா மூலமாக கௌதம் கம்பீரிடம் சென்றடையும் எனவும் கம்பீர் கருத்துக்கள் ஓஜா மூலமாக அவர்கள் இருவருக்கும் சென்றடையும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது

