சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிரடி ஆட்டக்காரராக விளையாடி வரும் ரிங்கு சிங் தற்போது நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரிலும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சரிவில் இருந்த உத்தர பிரதேச அணியை மீட்டெடுத்து இருக்கிறார்.
கோவையில் உள்ள ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேச அணிகள் விளையாடி வருகின்றன. தமிழக அணி தனது முதல் இன்னிங்ஸில் 455 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்க, அதற்கு பிறகு களம் இறங்கிய உத்திரபிரதேச அணி சிறிது தடுமாறிய போது ஐந்தாவது இடத்தில் களம் இறங்கி 247 பந்துகளை எதிர் கொண்டு 17 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர் என 176 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க:கட்டாயத்தின் பெயரில்தான் ஜடேஜாவை ராஜஸ்தான் அணிக்கு மாத்தினாங்க.. வெளிவந்த திடுக் ரிப்போர்ட்
இதனால் உத்தரபிரதேச அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 145 ஓவர்களில் 460 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. டி20 கிரிக்கெட்டில் நிரந்தர இடம் கிடைக்காமல் தவித்து வரும் ரிங்கு சிங் ரஞ்சி தொடரில் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை பறக்க விட்டது இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திடையே அதிக கவனத்தை பெற வைத்திருக்கிறது. மேலும் டி20 கிரிக்கெட் மட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தன்னால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ரிங்கு சிங்.

