இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாளை லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது. ஏற்கனவே இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளதால், இந்த போட்டியில் எந்த அணி வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆர்ச்சர் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார்.
ரிஷப் பண்ட் பேட்டி
இந்த நிலையில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், எப்போது கிரிக்கெட் விளையாட களத்தில் இறங்கிவிட்டால், மகிழ்ச்சியுடன் 200 சதவீதம் உண்மையாக விளையாடுவேன். எந்தவொரு வீரரையும் குஇறைத்து சொல்ல வேண்டும் என்பது என் எண்ணம் கிடையாது. ஆர்ச்சருக்கு எதிராக விளையாடுவது நிச்சயம் சிறந்த ஆட்டமாக இருக்கும்.
ஏனென்றால் நீண்ட இடைவெளிக்கு பின் கம்பேக் கொடுத்துள்ளார். இது எப்படி போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அவர் மீண்டும் கம்பேக் கொடுத்திருப்பது மகிழ்ச்சி. அதேபோல் டியூக் பந்துகளை அளவெடுக்க வைத்திருக்கும் காஜ் கொஞ்டம் சிறியதாக இருக்க வேண்டும் என்பதே ஆசை. அதேபோல் டியூக், கூக்குபெரா என்று அனைத்து பந்துகளுக்கும் ஒரே மாதிரியான அளவீடுகள் இருக்க வேண்டும்.
என்ன பிட்ச்?
ஏனென்றால் பந்துகள் மிக வேகமாக ஷேப் மாறிவிடுகிறது. அதனால் ஒவ்வொரு பந்தும் ஒவ்வொரு மாதிரியாக வருகிறது. அது இந்திய பவுலர்களுக்கு எரிச்சலை கொடுக்கும். அதேபோல் பந்து கொஞ்சம் பழையதாக மாறிவிட்டால், அதனை வைத்து பிட்சில் எதுவும் செய்ய முடிவதில்லை. இந்திய அணி 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்குமா என்பது நாளை தெரிந்துவிடும்.
எங்களுக்கு பிளாட் பிட்சாக இருந்தாலும் சரி.. புற்கள் நிறைந்த பிட்சாக இருந்தாலும் சரி.. கவலையே கிடையாது. நாங்கள் விளையாட தயாராக இருக்கிறோம். எதிரணிகள் என்ன சிந்திக்கிறார்கள் என்பது தொடர்பாக யோசிக்க தேவையில்லை என்று நினைக்கிறேன். அவர்கள் தங்களின் திட்டத்தை மாற்றுகிறார்களா என்பது பற்றி கவலையில்லை என்று தெரிவித்துள்ளார்.

