பிரையன் லாரா யாருனு தெரியுமா? அவரோட சாதனையை முறியடிக்க மாட்டேன்.. தென்னாப்பிரிக்கா கேப்டன் வியான் முல்டர் விளக்கம்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் வியான் முல்டர் 367 ரன்கள் எடுத்திருந்த போது, திடீரென டிக்ளேர் செய்தார். பிரையன் லாராவின் 400 ரன்கள் என்ற பிரம்மாண்ட சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் 34 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது, முல்டர் தாமாகவே டிக்ளேர் செய்து வெளியேறினார்.

- Advertisement -

மிஸ் செய்த முல்டர்

இது கிரிக்கெட் உலகையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஏனென்றால் 2வது நாளில் உணவு இடைவேளை முடிவடைந்த சில மணி நேரங்களிலேயே முல்டர் டிக்ளேர் செய்திருக்கிறார். இதன்பின் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 59 ஓவர்களை விளையாடி இருக்கிறது. இதனால் சாதனையை படைத்தபின் டிக்ளேர் செய்திருக்கலாமே என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

- Advertisement -

தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டனாக களமிறங்கிய முதல் போட்டியிலேயே முல்டர் 367 ரன்களை விளாசி இருக்கிறார். அதேபோல் 367 ரன்கள் சேர்த்ததன் மூலமாக, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் டாப் 5 இடங்களுக்குள் சென்றுவிட்டார். ஆனாலும் பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்க முயற்சிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

லாரா சாதனையை முறியடிக்காதது ஏன்?

இதைப்பற்றி வியான் முல்டர், தென்னாப்பிரிக்கா அணிக்கு தேவையான ரன்களை எடுத்துவிட்டோம். எங்கள் அணியின் வெற்றி மிகவும் முக்கியம். அதேபோல் பிரையன் லாரா மிகப்பெரிய ஜாம்பவான். அவர் 400 ரன்களை இங்கிலாந்து போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிராக செய்திருக்கிறார். அவரைப் போன்ற ஒரு ஜாம்பவான் வீரர் வசம் 400 ரன்கள் சாதனை இருப்பதே பொருத்தமானது.

ஒருவேளை மீண்டும் 400 ரன்கள் என்ற சாதனையை முறியடிக்க வாய்ப்பு கிடைத்தாலும், மீண்டும் இதையே தான் செய்வேன். இதைப்பற்றி என் பயிற்சியாளர், அணியிடமும் கூறிவிட்டேன். அவர்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசுவேன் என்று கூட நினைத்ததே இல்லை. ஆனால் கேப்டனான முதல் போட்டியிலேயே முச்சதம் அடித்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் லாராவின் ரசிகர்கள் முல்டரை பாராட்டி வருகின்றனர். 

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles