அற்புதமான சான்ஸ்.. டான் பிராட்மேன், ராகுல் டிராவிட், லாரா வரிசையில் இணைவாரா ரிஷப் பண்ட்?

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜூலை 2ஆம் தேதி எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கான பயிற்சியில் இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இன்றைய பயிற்சியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் கலந்து கொண்டு சில ஓவர்களை வீசினார்.

- Advertisement -

சிறந்த சான்ஸ்

இதனிடையே ரிஷப் பண்ட் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. ஏனென்றால் லீட்ஸ் மைதானத்தில் ரிஷப் பண்ட் ஆடிய 2 இன்னிங்சிலும் சதங்களை விளாசி அசத்தி இருக்கிறார். இதன் மூலமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே டெஸ்ட் போட்டியில் 2 சதங்களை விளாசிய 2வது வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றார்.

- Advertisement -

அதேபோல் இங்கிலாந்து மண்ணில் ரிஷப் பண்ட் அடித்த 3வது சதமாக அது பதிவாகியது. இந்த நிலையில் ரிஷப் பண்ட் அடுத்த போட்டியில் சதம் அடித்தால், மிகப்பெரிய சாதனை படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதாவது இங்கிலாந்து மண்ணில் தொடர்ச்சியாக 3 சதங்களை விளாசிய 8வது வீரர் என்ற சாதனையை படைப்பார்.

- Advertisement -

சாதிப்பாரா ரிஷப் பண்ட்?

இந்த பட்டியலில் கிரிக்கெட் ஜாம்பவான்களான டொனால்ட் பிராட்மேன், ராகுல் டிராவிட், பிரையன் லாரா, டேரல் மிட்சல் ஆகியோர் இருக்கின்றனர். 2002ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது தொடர்ச்சியாக 3 சதங்களை விளாசி இருக்கிறார். இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிரான 19 இன்னிங்சில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட், 4 சதங்கள், 2 அரைசதங்களை விளாசி இருக்கிறார்.

இதனால் ரிஷப் பண்ட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் ஐபிஎல் தொடரில் ஃபார்மின்றி தவித்து வந்த ரிஷப் பண்ட், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபார்முக்கு திரும்பி உள்ளார். இதனால் நிச்சயமாக ரிஷப் பண்ட் சதம் அடிப்பார் என்று எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அப்படி செய்தால், உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் மாறுவார் என்று பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles