ஷர்துல் தாக்கூர் பற்றி உங்கள் யாருக்கும் தெரியாது.. 96 பந்துகளை மட்டுமே வீசியிருக்கிறார்.. ரஹானே ஆதரவு

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. 371 ரன்கள் என்ற பெரிய இலக்கை நிர்ணயித்த போதும், இந்திய அணியால் வெல்ல முடியவில்லை. இதற்கு இந்திய அணியின் கேட்ச் மிஸ் மற்றும் கீழ் வரிசை வீரர்களின் பேட்டிங் பங்களிப்பு ஆகியவை காரணமாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

ரஹானே ஆதரவு

அதேபோல் இந்திய அணி ஷர்துல் தாக்கூரை போதுமான அளவிற்கு பயன்படுத்தவில்லை. முதல் டெஸ்டில் பும்ரா 262 பந்துகளையும், சிராஜ் 246 பந்துகளையும், பிரசித் கிருஷ்ணா 210 பந்துகளையும், ரவீந்திர ஜடேஜா 282 பந்துகளையும் வீசி இருக்கின்றனர். ஆனால் ஷர்துல் தாக்கூர் வெறும் 96 பந்துகளை மட்டுமே இரு இன்னிங்சிலும் சேர்த்து வீசி இருக்கிறார்.

- Advertisement -

இதனால் ஷர்துல் தாக்கூருக்கு இன்னொரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று சிலர் கூறி வருகின்றனர். இதுதொடர்பாக இந்திய முன்னாள் கேப்டன் ரஹானே பேசும் போது, இங்கிலாந்து மண்ணில் பயன்படுத்தப்படும் டியூக் பால்களை 12 ஓவர்களுக்கு பின்னரே நன்றாக ஸ்விங்காகும். அதனால் ஷர்துல் தாக்கூரை பும்ரா அல்லது சிராஜ் ஆகியோருடன் இணைந்து பவுலிங் செய்ய பயன்படுத்தி இருக்க வேண்டும்.

- Advertisement -

ஷர்துல் தாக்கூரின் திறமை

அப்படி செய்திருந்தால், நிச்சயம் அதிக விக்கெட்டுகளை ஷர்துல் தாக்கூர் கைப்பற்றி இருப்பார். தனிப்பட்ட முறையில் ஷர்துஇல் தாக்கூர் அதிக ஓவர்களை வீச வேண்டும் என்றே நினைப்பேன். அவருக்கு அந்த சுதந்திரத்தை அளித்தால், எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்தி காட்டுவார். இந்திய டெஸ்ட் அணியில் ஒரு ஆல் ரவுண்டரின் ரோல் மிகவும் முக்கியமானது. ஷர்துல் தாக்கூருக்கு மிகச்சிறந்த அனுபவம் உள்ளது.

அதேபோல் வெளிநாட்டில் ஆடிய டெஸ்ட் போட்டிகளில் நன்றாக விளையாடி இருக்கிறார். ஷர்துல் தாக்கூரால் இரு பக்கமும் பந்தை ஸ்விங் செய்ய முடியும். மிகச்சிறந்த விக்கெட் டேக்கர். அவரை புதிய பந்தில் பவுலிங் செய்ய வைக்க வேண்டும். அப்போது அவரின் முழு திறமையை நீங்கள் அறிவீர்கள் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles