13 பவுண்டரி, ஒரு சிக்ஸ்.. 151 பந்துகளில் சதம் விளாசிய குட்டி கோலி.. இங்கிலாந்து மண்ணில் முதல் இன்னிங்ஸிலேயே சம்பவம்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூன் 20ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக இந்தியா ஏ அணி இங்கிலாந்து பயணித்து இங்கிலாந்து லயன்ஸ் அணியை எதிர்த்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தியா ஏ அணி அபிமன்யூ ஈஸ்வரன் தலைமையில் களமிறங்கி இருக்கிறது.

- Advertisement -

இந்தியா ஏ vs இங்கிலாந்து லயன்ஸ்

முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி இருக்கிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதன்பின் இந்தியா ஏ அணி தரப்பில் ஜெய்ஸ்வால் – கேஎல் ராகுல் இணை தொடக்கம் கொடுத்தது. இதில் ஜெய்ஸ்வால் 17 ரன்களில் ஆட்டமிழக்க, பின் வந்த கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரன் 11 ரன்களில் வெளியேறினார்.

- Advertisement -

இதையடுத்து கேஎல் ராகுல் – கருண் நாயர் இணை பார்ட்னர்ஷிப் அமைத்தது. கேஎல் ராகுல் அரைசதம் கடந்து சிறப்பாக ஆடிய நிலையில், 3வது விக்கெட்டுக்கு 86 ரன்கள் சேர்த்தது. இதனால் கருண் நாயர் 40 ரன்களில் வெளியேற, கேஎல் ராகுல் இன்னொரு பக்கம் நிலையான ஆட்டத்தை வெளிபப்டுத்தினார். அவருக்கு துருவ் ஜுரெல் கம்பெனி கொடுத்தார்.

- Advertisement -

சதம் விளாசிய கேஎல் ராகுல்

இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய கேஎல் ராகுல் 151 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அதில் ஒரு சிக்ஸ், 13 பவுண்டரியும் அடங்கும். இதன் மூலமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடரை கேஎல் ராகுல் சிறப்பாக தொடங்கி இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அதேபோல் கடந்த இங்கிலாந்து தொடரில் கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்கி மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் இனி டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியின் தொடக்க வீரருக்கான இடத்தை கேஎல் ராகுல் உறுது செய்துவிட்டதாக பார்க்கப்படுகிறது. விராட் கோலி ஓய்வை அறிவித்துள்ள நிலையில், கேஎல் ராகுலுக்கு கன்சிஸ்டன்சியுடன் வாய்ப்பு கிடைக்கும்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles