வீடியோ போட்டு விராட் கோலியை கலாய்க்கும் இங்கிலாந்து அணி.. ஓய்வு பெற இதுதான் காரணமா.? பதிலடி கொடுத்து வரும் ரசிகர்கள்

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அதற்கு பிசிசிஐ மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து கவுன்ட்டி சாம்பியன்ஷிப் நிர்வாகம் விராட் கோலி குறித்து பகிர்ந்துள்ள ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

டெஸ்ட் தொடரில் இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தோல்வியும் அதற்குப் பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியும் சந்தித்தது. அதில் மோசமாக விளையாடிய இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு முன்பாக மரியாதையோடு தான் ஓய்வு பெற விரும்புவதாக அறிவித்து ஓய்வு பெற்ற விட்டார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் அவரைத் தொடர்ந்து விராட் கோலி ஓய்வு முடிவை அறிவிக்க விரும்புவதாக பிசிசிஐயிடம் அறிவிக்க, அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ கேட்டுக் கொண்டுள்ளது. இது ஒரு புறம் நிகழ்ந்து கொண்டிருக்க, இங்கிலாந்து கவுண்டி சாம்பியன்ஷிப் நிர்வாகம் தங்களுடைய டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில் விராட் கோலியைக் கலாய்த்துள்ளது. அதாவது அங்கு நடந்த சில கவுண்ட்டி போட்டிகளில் நிறைய பேட்ஸ்மேன்கள் அவுட்சைடு ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை விளையாட முயற்சித்து அவுட் ஆகி வெளியேறினார்கள்.

அந்த விக்கெட்டுகளை ஒன்றாக சேர்த்து கவுண்டி நிர்வாகம் வீடியோவாக வெளியிட்டு உங்களைச் சொல்லி குற்றமில்லை விராட் என்ற தலைப்போடு அந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. அதாவது ஏற்கனவே அவுட்சைடு ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்துகளை விளையாடுவதற்கு சிரமப்படும் விராட் கோலி இந்த முறையும் அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை முன்னரே கணித்து ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளதாக கவுண்டி நிர்வாகம் கலாய்த்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க:மீண்டும் தொடங்கும் ஐபிஎல்.. 3 மைதானங்களை தேர்வு செய்துள்ள பிசிசிஐ.. கொண்டாட்டத்தில் ஆர்சிபி ரசிகர்கள்

இதை கவனித்த இந்திய ரசிகர்கள் 2018 ஆம் ஆண்டு விராட் கோலி இங்கிலாந்தில் சிறப்பாக விளையாடியதை மறந்து விட்டீர்களா என அவர்களின் வீடியோவிற்கு சரியான பதில் அளித்து வருகிறார்கள். எனவே இந்த முறையும் விராட் கோலி சிறப்பாக செயல்பட்டு இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைவார் என்று எதிர்பார்க்கலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles