எவரெஸ்டில் கூட ஏறிடலாம் .. ஐபிஎல் கோப்பை வெல்வது மிகவும் கடினம் போல – ஆர்சிபி யின் முன்னாள் வீரர் டிவிலியர்ஸ் பேட்டி

அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் அந்தந்த தேசிய அணியில் சிறந்து விளங்கியவராக இருந்தாலும், ஆர்சிபி அணிக்கு விளையாட உள்ளார்கள் என்று அவர்களுக்கு தெரிந்த உடனே அவர்களுக்கு கிரிக்கெட் மறந்து போகும் போல. இதுபோலவே ஒவ்வொரு சீஷனும் கடந்து தற்பொழுது பதினெட்டாவது சீசனுக்கு, கோப்பையை இந்த முறையாவது வெல்லும் என்ற நம்பிக்கையோடு களமிறங்க உள்ளது ஆர்சிபி அணி.

- Advertisement -

ஆர்சிபி அணிக்காக பல வருடங்கள் சிறப்பாக விளையாடி ரசிகர்கள் மனதை வென்ற தென்னாபிரிக்காவை சார்ந்த டிவிலியர்ஸ் ஐபிஎல் போட்டிகள் பெங்களூரு அணி கோப்பை வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை சிறந்த எடுத்துக்காட்டின் மூலம் கூறியுள்ளார். இதன் மூலம் இவருக்கு கோப்பையின் மீது உள்ள ஆர்வமும், ஏக்கமும் என்னவென்று ரசிகர்கள் அனைவருக்கும் புரிந்துள்ளது.

- Advertisement -

ஐபிஎல் போட்டியில் வெற்றி பெறுவது நம்பமுடியாத அளவிற்கு கடினம்.ஐபிஎல் போட்டி ஒருபுறம் இருக்க, உலகக் கோப்பையை கூட வெல்லக்கூடிய 10 உலகத் தரம் வாய்ந்த அணிகள் உள்ளன. பயணம், குழு உத்திகள், காயங்கள் மற்றும் சீசன் முழுவதும் வெவ்வேறு நிலைமைகளுக்கு ஏற்றவாறு பல காரணிகள் விளையாடுகின்றன.

- Advertisement -

போட்டியின் இறுதியில் ஆற்றலையும் வேகத்தையும் ஒருசேர நிர்வகிக்கும் அணி பொதுவாக சிறந்து விளங்கும்.
இந்த வருடத்திற்கான ஆர்சிபி அணி குறித்து டி விலியர்ஸ் கூறும்போது
“இது 18வது சீசன் என்று நீங்கள் அனைவரும் அறிய, அணியில் 18 என்ற எண் கொண்ட வீரரும் உள்ளார். ஒவ்வொரு முறையும் நம் கோப்பையை வெல்லும் என்று அணியின் ஒவ்வொரு ரசிகர்களும் மிகவும் அவருடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் நானும் ஒரு ரசிகனாக ஆர்சிபி கோப்பையை வென்றால் விராட்டுடன் கொண்டாடுவேன்!” என்று கூறினார்.

மேலும் அவர் கூறும்போது ” நான் ஒரு முறை ஈ சாலா கப் நம்தே” என்று திரும்பத் திரும்பச் சொல்லி விராட் கோலியிடம் சிக்கலில் சிக்கி கொண்டேன். நான் மறுநாள் ‘ஈ சாலா கப் நம்தே’ என்று சொன்னேன், விராட்டிடமிருந்து எனக்கு நேரடி செய்தி வந்தது. அவர் என்னிடம், ‘தயவுசெய்து, இப்போது அதைச் சொல்வதை நிறுத்துங்கள்’ என்றார். அதனால், அதற்காக நான் கொஞ்சம் சிரமப்பட்டேன்! அப்போதுதான் எனக்கு புரிந்தது ஐபிஎல் கோப்பு வெல்வது என்பதை மிகவும் எளிதான விஷயம் அல்ல என்று.நியாயமாகச் சொல்வதானால், நான் எப்போதும் அதைச் சொல்வதில் ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறினார்.

- Advertisement -

மார்ச் 22 ஆம் தேதி நடைபெறும் சீசன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸை ஆர்சிபி எதிர்கொள்ள உள்ளது. நடந்து முடிந்த மெகா இடத்தில் எங்களால் முடிந்த அளவு சிறப்பான அணியை கட்டமைத்துள்ளோம் என்று ஆர்சிபி அணியின் நிர்வாகம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles