ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் இந்தியாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி தான் சந்தித்ததிலேயே மிகவும் கடினமான பவுலர் குறித்து சில விஷயங்கள் பேசி இருக்கிறார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளோடு இரண்டு முறை மோத வேண்டி இருக்கும். லீக் சுற்றில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்தடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சூழ்நிலையில் ஐபிஎல் அணியின் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக கருதப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்தத் தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்திலும் சிறப்பாக வீரர்களை எடுத்து வலுவாக களம் இறங்க உள்ளது.
மேலும் பெங்களூர் அணிக்கு ராஜத் பட்டித்தார் கேப்டன் ஆக பொறுப்பேற்று அணியை வழிநடத்த உள்ளார். மேலும் அந்த அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி மிகச் சிறப்பான பேட்டிங் ஃபார்மில் தற்போது இருக்கிறார். எனவே இந்த முறை பெங்களூர் அணி கோப்பையை வெல்ல மிக தீவிரமான முறையில் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்திருந்த விராட் கோலி ஐபிஎல் தொடரில் தான் சந்தித்த கடினமான பவுலர் குறித்த சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து விராட் கோலி கூறும் போது ” தற்போது உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர் பும்ரா என்பதில் எந்த விதமான சந்தேகமும் கிடையாது. அவர் என்னை ஐபிஎல் தொடரில் சில முறை வெளியேற்றி இருக்கிறார். நாங்கள் போட்டியில்லாமல் வலையில் இருவரும் சந்தித்துக் கொண்டால் கூட அது மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். அதிலும் குறிப்பாக நாங்கள் ஐபிஎல் தொடரில் மோதிக் கொள்வது போல வலை பயிற்சியில் மோதிக் கொள்வோம். மேலும் அவர் வீசுகிற ஒவ்வொரு பந்தும் மைண்ட் கேம் போல இருக்கும்.
இதையும் படிங்க:மாஸ்டர்ஸ் கோப்பை பைனலில் பரபரப்பு.. யுவராஜ் சிங்கை சீண்டிய டினோ பெஸ்ட் ! தக்க பதிலடி கொடுத்த யுவராஜ்
நான் சந்தித்ததிலேயே மிகவும் கடினமான பவுலர் அவர்தான்” என்று விராட் கோலி புகழ்ந்து பேசி இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பும்ரா ஏப்ரல் முதல் வாரம் வரை அணியில் இணைய மாட்டார் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளது. காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய பும்ரா அதற்குப் பிறகு சமீபத்தில் நடைபெற்ற முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

