மாஸ்டர்ஸ் கோப்பை பைனலில் பரபரப்பு.. யுவராஜ் சிங்கை சீண்டிய டினோ பெஸ்ட் ! தக்க பதிலடி கொடுத்த யுவராஜ்

கிரிக்கெட் மைதானத்தில் உணர்ச்சிகள் வெளிப்படும் தருணங்கள் அரிதல்ல. நேற்று நடந்த மாஸ்டர்ஸ் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய மாஸ்டர்ஸ் அணியின் யுவராஜ் சிங்கிற்கும் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியின் டினோ பெஸ்ட்டிற்கும் இடையே நடந்த மோதல், ரசிகர்களை பரபரப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

- Advertisement -

டினோ பெஸ்ட் தனது ஓவரை முடித்த பிறகு, காயம் காரணமாக மைதானத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார். இதை யுவராஜ் சிங் நடுவர் பில்லி பவுடனிடம் கூறினார். நடுவர், பெஸ்ட்டை மீண்டும் மைதானத்திற்கு திரும்புமாறு கேட்டுக்கொண்டார். இது பெஸ்ட்டிற்கு பிடிக்காமல் கோபமடைந்த அவர், யுவராஜை நோக்கி வந்து வார்த்தைகளால் தாக்கினார். இரு வீரர்களும் ஒருவருக்கு ஒருவர் பின்வாங்காமல், சிறிது நேரம் தீவிரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

- Advertisement -

இதை பார்த்த வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணியின் கேப்டன் பிரையன் லாராவும், இந்திய அணியின் அம்பதி ராயுடுவும் இடையில் புகுந்து பெஸ்ட்டை சமாதானப்படுத்த முயன்றனர். டினோ பெஸ்ட் பொதுவாகவே வாக்குவாதத்தில் ஈடுபடும் வீரரே. மேலும் யுவராஜும் அப்படித்தான் என்பதால், இருவரும் சளைக்காமல் மோதிக் கொண்டனர்.ஆனால், யுவராஜ் சிங் இதை வெறும் வார்த்தைகளோடு விட்டுவிடவில்லை. அடுத்த பந்தில் அவர் ஒரு அபாரமான சிக்ஸரை விளாசினார். பின்னர், தனது பேட்டை டினோ பெஸ்ட்டை நோக்கி காட்டி, பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

இது, 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணியுடனான மோதலை நினைவுபடுத்தியது. அப்போது ஆண்ட்ரூ ஃபிளின்டாஃப்புடனான வாக்குவாதத்திற்கு பிறகு, ஸ்டூவர்ட் பிராடின் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை விளாசி யுவராஜ் வரலாறு படைத்தார். இந்த சம்பவமும் அதே உணர்ச்சி தீவிரத்தை பிரதிபலித்தது.பின்னர் இரண்டாவது இடைவேளையின்போது பதற்றம் சற்று தனிய, யுவராஜ் சிங் பெஸ்ட்டின் முதுகை பண்பாகத் தட்டி சூழலை சுலபமாக எடுத்துச் சென்று முடித்தார்.

போட்டியைப் பொறுத்தவரை, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி 20 ஓவர்களில் 148/7 ரன்கள் எடுத்தது. அதில் லெண்டல் சிம்மன்ஸ் 57 ரன்களும், ட்வெய்ன் ஸ்மித் 45 ரன்களும் அடித்தனர். இந்திய மாஸ்டர்ஸ் அணி 149 ரன்கள் என்ற இலக்கை 17 பந்துகள் மீதமிருக்கையில் வெற்றிகரமாக எட்டியது. அம்பதி ராயுடு 74 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றினார். சச்சின் டெண்டுல்கர் தலைமையில் இந்திய மாஸ்டர்ஸ் அணி கோப்பையை வெற்றிகரமாகத் தட்டித் தூக்கியது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles