பாபர் அசாமை, விராட் கோலியுடன் ஒப்பிடுவதா… உங்களுக்கு அறிவிருக்கா… முன்னாள் பாகிஸ்தான் வீரர் காட்டமான பதிலடி

9-வது ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பலபரிட்சையில் ஈடுபட்டு வருகின்றன. இன்று தொடங்கிய சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகின்ற மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.

- Advertisement -

8 அணிகள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டி தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் நாளை துபாயில் விளையாட இருக்கின்றன. மேலும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி வருகின்ற 23ஆம் தேதி துபாயில் வைத்து நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இந்தத் தொடருக்கு முன்பாக இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாடியது. மேலும் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் கலந்து கொண்ட முத்தரப்புத் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்றது. கடந்த 2024 ஆம் வருட டி20 உலக கோப்பைக்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாமின் பேட்டிங் சுமாராகவே இருந்து வருகிறது. தென்னாபிரிக்க அணியுடன் நடைபெற்ற தொடரில் ஒரு அரை சதம் அடித்த பாபர் அசாம் சமீபத்தில் நடந்து முடிந்த முத்தரப்பு தொடரில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து அவர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாமை இந்திய அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் விராட் கோலியுடன் ஒப்பிடுவது முட்டாள்தனமானது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரும், பாபர் அசாமின் உறவினருமான கம்ரான் அக்மல் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக யூடியூப் சேனலில் பேசியிருக்கும் அவர் விராட் கோலியை, பாபர் அசாமுடன் ஒப்பிடுபவர்கள் முட்டாள்கள் என கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

இதுகுறித்து விரிவாக பேசியிருக்கும் அவர் ” சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி மிகப்பெரிய வீரர். உலகத்தில் இருக்கும் அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் அவர் ரோல் மாடலாக இருந்து வருகிறார். மேலும் இந்திய அணிக்கு தனது பேட்டிங்கின் மூலம் பல வெற்றிகளை பெற்றுத் தந்தவர். அவர் போன்ற ஒரு நட்சத்திர வீரரை எந்த ஒரு வீரருடனும் ஒப்பிட முடியாது என தெரிவித்தார். மேலும் விராட் கோலி போன்ற வீரர்கள் கிரிக்கெட் உலகில் மிகவும் அரிதாகவே கிடைப்பார்கள் எனவும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர் பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிடுவது முட்டாள்தனமானது. அப்படி ஒப்பிடுபவர்கள் முட்டாள்கள் என கடுமையான சொற்களை பயன்படுத்தி விமர்சித்திருக்கிறார். மேலும் பாபர் அசாமின் பேட்டிங் குறித்து பேசிய கம்ரான் அக்மல், நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பாபர் அசாம் நிச்சயமாக ஃபார்முக்கு திரும்புவார் என தெரிவித்திருக்கிறார். பாபர் அசாமின் 20-வது சதத்திற்காக பாகிஸ்தான் நாடே காத்துக் கொண்டிருக்கிறது. இந்தச் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பாபர் அசாம் அதனை நிறைவேற்றுவார் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பாபர் அசாம் தனது சர்வதேச கிரிக்கெட்டை தொடங்கிய நாளிலிருந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வந்தார். எனினும் சமீப காலமாக ஒரு நாள் போட்டிகளில் அவரது பேட்டிங் ஃபார்ம் மோசமாகி இருக்கிறது. பாபர் அசாம் தனது 19ஆவது சதத்தை 2023 அவருடைய ஆசிய கோப்பையில் நேபாள் அணிக்கு எதிராக பதிவு செய்தார். அதன்பிறகு கடந்த ஒன்றரை வருடங்களில் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர்களில் அவர் ஒரு சதம் கூட எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles