1 ரன்னில் பறி போன வரலாற்று சாதனை… ஒரு போட்டியில் கூட தோற்காமல் வெளியேறிய காஷ்மீர் அணி… கேரளா செமி பைனலுக்கு முன்னேறியது எப்படி

90 வது ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தியாவின் பிரதான உள்நாட்டு கிரிக்கெட்டாக கருதப்படும் ரஞ்சிக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 2024-25 சீசன் தற்போது நாக் அவுட் சுற்றுக்களை எட்டியிருக்கிறது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த லீக் சுற்றுகள் முடிவில் தமிழ்நாடு, மும்பை, கேரளா, ஹரியானா, விதர்பா, குஜராத், சௌராஷ்ட்ரா மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகள் எலைட் பிரிவில் காலிறுதி போட்டிகளுக்கு தகுதி பெற்றன.

- Advertisement -

பரபரப்பாக நடைபெற்ற காலிறுதிப் போட்டிகளின் முடிவில் மும்பை, விதர்பா, குஜராத் மற்றும் கேரளா அணிகள் அரை இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. இதில் மகராஷ்டிரா மாநிலம் புனேவில் நடைபெற்ற கேரளா மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகளுக்கிடையான கிரிக்கெட் போட்டி வரலாற்று சிறப்புமிக்க போட்டியாக பார்க்கப்படுகிறது. ரஞ்சி டிராபி தொடரில் பிளேட் குரூப்பில் பயணத்தை தொடங்கி இன்று எலைட் விரைவில் காலிறுதி போட்டி வரை முன்னேறி ஜம்மு காஷ்மீர் அணி சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

மகாராஷ்டிரா மாநிலத்தின் புனே நகரில் நடைபெற்ற முதலாவது காலிறுதி போட்டியில் கேரளா மற்றும் காஷ்மீர் அணிகள் மோதியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேரளா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. கேரளா அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி காஷ்மீர் அணியை 280 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தனர். அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் நித்தேஷ் சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய கேரளா அணி, காஷ்மீர் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. எனினும் அந்த அணியின் ஆல் ரவுன்டர் ஜாலஜ் சக்சேனா மற்றும் சல்மான் நிசார் ஆகியோர் சிறப்பாக விளையாடி அணியை ஆரம்ப சரிவிலிருந்து மீட்டனர்.

- Advertisement -

சக்சேனா 67 ரன்களில் ஆட்டம் இழந்ததை தொடர்ந்து கேரளா மீண்டும் சரிவை சந்தித்தது. எனினும் அந்த அணியின் வீரர் சல்மான் நிசார் ஒரு முனையில் சிறப்பாக விளையாடி கேரளா அணியின் ஸ்கோர் உயர காரணமாக இருந்தார். எனினும் கேரளா அணி 200 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்திருந்தது. இதனால் காஷ்மீர் அணி முதல் இன்னிங்ஸில் லீட் எடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேரள அணியின் இறுதி விக்கெட் ஜோடி சிறப்பாக விளையாடி பத்தாவது விக்கெட்டிற்கு 81 ரன்கள் சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து 281 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது கேரளா. சிறப்பாக விளையாடிய சல்மான் நிசார் 112 ரன்களுடன் நாட் அவுட்டாக இருந்தார்.

இதன் மூலம் கேரளா அணி ஒரு ரன்கள் முன்னிலை பெற்றது. இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேற வேண்டும் என்று களமிறங்கிய காஷ்மீர் அணியினர் இரண்டாவது இன்னிங்ஸில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அந்த அணியின் கேப்டன் டோக்ரா 132 ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக விளையாடிய கண்ணையா வதவா 64 ரன்களும், சகில் லோஹ்ரா 59 ரன்களும் சேர்த்தனர். இதனைத் தொடர்ந்து 399 ரன்கள் குவித்த காஷ்மீர் அணி டிக்ளேர் செய்தது.

- Advertisement -

இதன் பிறகு 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கேரளா அணி முதல் இன்னிங்ஸில் லீட் எடுத்திருந்ததால் இரண்டாவது இன்னிங்ஸில் தோல்வியடைய கூடாதென நிதானமாக விளையாடினர். எனினும் ஐந்தாம் நாள் உணவு இடைவேளைக்குப் பிறகு சிறப்பாக பந்து வீசிய காஷ்மீர் அணியின் சுழற் பந்து வீச்சாளர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து கேரளா 187 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது.

இதனால் காஷ்மீர் அணி வெற்றி பெற்று ரஞ்சி கோப்பையின் அரை இறுதிக்கு முன்னேறி வரலாற்று சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் இன்னிங்ஸில் கேரளாவிற்காக சிறப்பாக விளையாடிய சல்மான் நிசார் மற்றும் அந்த அணியின் விக்கெட் கீப்பர் அசாருதீன் ஆகியோர் இணைந்து கேரளாவை சரிவிலிருந்து மீட்டதோடு போட்டியை ட்ரா செய்தனர். இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பெற்ற 1 ரன் லீட் அடிப்படையில் கேரளா அணி வரலாற்றில் இரண்டாவது முறையாக ரஞ்சி கோப்பையின் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்தது.

இதன் மூலம் இந்த வருட ரஞ்சித் டிராபியில் தோல்வியடையாத காஷ்மீர் அணி முதல் இன்னிங்ஸில் 1 ரன் லீட் கொடுத்ததன் காரணமாக ரஞ்சிக்கோப்பை வரலாற்றில் முதல்முறையாக அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்திருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles