பாவம்பா கோலி.. இந்த புதிய விதி அவருக்கு மேலும் பெரிய பிரச்சினை தர போகுது.. இதெல்லாம் நல்லாவே இல்ல – ஆஸி பிராட் ஹாக் பேட்டி

சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இழந்ததை தொடர்ந்து இந்திய அணிக்கு பிசிசிஐ புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. அனைத்து வீரர்களும் அணியுடன் பயணம் செய்வதை வாரியம் கட்டாயமாக்கியுள்ளது மற்றும் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது குடும்பங்கள் தங்குவதைக் குறைத்துள்ளது.

- Advertisement -

பிசிசிஐ விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள் விராட் கோலிக்கு அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் கருதுகிறார்.

- Advertisement -

வேலை சுமை தான் அவருடைய மோசமான செயல்திறனுக்கு காரணம்:

ஹாக் யூட்யூப் சேனலில் கூறியதாவது, “கோலிக்கு இப்போது குடும்பம் இருக்கிறது. அவருக்கு இப்போது மைதானத்திற்கு வெளியே நிறைய பொறுப்புகள் இருக்கிறது, அதனால் தான் மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் அவரது நிலை பாதிக்கப்படுகிறதோ என எனக்கு தோன்றுகிறது. மைதானத்தில் நடப்பதை விட மைதானத்திற்கு வெளியே நடப்பதுதான் அவளுக்கு அதிக முக்கியமாக இருக்கிறது. அவரின் அதிக வேலைச்சுமைதான் இப்போது மோசமான செயல்திறனை உருவாக்கியிருக்கலாம்.”

- Advertisement -

அவர்களின் குடும்பங்களை அனுமதிக்க வேண்டும்:

மேலும் அவர், “பிசிசிஐ குடும்பங்களைச் சார்ந்த புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. இதனால் கோலியின் மீது கூடுதல் அழுத்தம் ஏற்படும்… ஏனெனில், நீங்கள் வாழ்க்கையிலும் விளையாட்டிலும் சமநிலையோடு இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

இந்திய அணி வீரர்களுக்கு இப்பொழுது அதிக கிரிக்கெட் போட்டிகளும், பயணங்களும் உள்ளதனால், வீரர்கள் அவர்களின் குடும்பங்களை அவர்களுடன் பயணம் செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும்,” என்றும் கூறினார்.

- Advertisement -

கோலி, தற்போது 22.47 சராசரியில் ஒரு சதம் மற்றும் பல அரைசதங்களுடன் 382 ரன்கள் எடுத்துள்ளார். கோலியின் மோசமான ரன்களைத் தொடர்ந்து, அணியில் அவரது இடம் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. இந்த புதிய விதிகள் வரும் மாதங்களில் அணியின் செயல்திறனில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles