யுவராஜ் சிங்க்கு கோலி மரியாதை கொடுக்கல.. ஆனா அவரு கடந்து வந்த பாதை ரொம்ப கஷ்டம் – உத்தப்பா பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த ஆல் ரவுண்டராக திகழ்ந்த யுவராஜ் சிங் டி20 மற்றும் ஒரு நாள் உலகக் கோப்பைகளை இந்திய அணி வென்ற போது அதற்கு முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் விராட் கோலி கேப்டன் ஆன பிறகு யுவராஜ் சிங்கை சரியாக வழி நடத்தவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா சில சர்ச்சையான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியில் மகேந்திர சிங் தோனிக்கு பிறகு 2017 ஆம் ஆண்டு விராட் கோலி முழுநேர கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது மகேந்திர சிங் டோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் சீனியர் வீரர்களாக இந்திய அணியில் விளையாடி வந்த நிலையில் யுவராஜ் சிங் விராட் கோலி கேப்டன் ஆன பிறகு ஒரு சில வெள்ளை பந்து போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார். ஏன் இறுதியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விளையாடி முடித்துவிட்டு அவர் ஓய்வு பெற்று விட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் யுவராஜ் சிங் ஓய்வு பெறும் போது இரண்டு உலக கோப்பைகள் வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்த ஒரு சிறந்த ஆல் ரவுண்டருக்கு சரியான மரியாதை கொடுக்கப்படவில்லை என்று அப்போதே விராட் கோலியின் மீது சில விமர்சனங்கள் இருந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா யுவராஜ் சிங்குக்கு விராட் கோலி சரியான மரியாதை கொடுக்கவில்லை என்று சில சர்ச்சையான கருத்துக்களை பேசிய நிலையில் அது இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ராபின் உத்தபா கூறியதாவது “யுவராஜ் சிங் உடல் தகுதியில் இரண்டு புள்ளிகள் பெறவில்லை அதனால் அவர் இந்திய அணியில் தான் ஒரு இடத்தை இழந்தார். அதற்கு பிறகு தனது கடின உழைப்பின் மூலமாக மீண்டும் இந்திய அணிக்குள் நுழைந்த போது அவருக்கு சரியாக போட்டிகள் அமையவில்லை. அந்த நேரத்தில் கேப்டனாக இருந்த விராட் கோலி அவரை சரியான முறையில் உபசரிக்கவில்லை. யுவராஜ் சிங் குறிப்பாக ஒரு புற்று நோயை வென்று வந்த மனிதர்.

- Advertisement -

இதையும் படிங்க:எல்லாம் முடிஞ்சு போச்சு.. மீண்டும் அறுவை சிகிச்சையில் பும்ரா.. ஐபிஎல் தொடருக்கு கேள்விக்குறி.. முழு விபரம்

அதற்குப் பிறகு இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிக்க விரும்பினார். ஆனால் அவருக்கு சரியான சமயம் ஒத்துவரவில்லை. ஆனால் இந்திய அணிக்காக இரண்டு உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என்பதில் சந்தேகம் இல்லை. அப்படிப்பட்ட வீரரை பற்றி பேசும்போது அவருக்கு நுரையீரலில் பிரச்சனை உள்ளது என்றும், அதை நீங்கள் பார்த்ததாகவும் கூறுகிறீர்கள். விராட் கோலி அவரை இன்னும் சிறப்பாக வழி நடத்தி இருக்க வேண்டும்” என்ற உத்தப்பா கூறியிருக்கிறார்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles